For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருடத்தின் முதல் நாளே சோகம்.. காஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. 2 இந்திய வீரர்கள் பலி!

புத்தாண்டின் முதல் நாளே ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி தாக்குதல் நடத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: புத்தாண்டின் முதல் நாளே ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. அங்கு இன்று காலை சரமாரியாக நடந்த சண்டையில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் தற்போது புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி ஆகிய பெரு நகரங்களில் மிகப்பெரிய அளவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகிறது.

Pakistan army attacks in Jammu Kashmir LOC: 2 Indian soldiers died

இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுத்தனர். சுமார் 1 மணி நேரம் இந்த சண்டை அங்கு நடந்தது .

அங்கு இன்று காலை சரமாரியாக நடந்த சண்டையில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அங்கிருந்து காட்டு பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ பாக் வீரர்கள் முயன்று உள்ளனர். இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி அதை முறியடித்தது.

தீவிரவாதத்தை ஒடுக்குங்க.. இல்லைனா தாக்குதல்தான்.. பாக்.கிற்கு முதல் நாளே வார்னிங் தந்த புது தளபதிதீவிரவாதத்தை ஒடுக்குங்க.. இல்லைனா தாக்குதல்தான்.. பாக்.கிற்கு முதல் நாளே வார்னிங் தந்த புது தளபதி

தற்போது அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் இன்றுதான் எஸ்எம்எஸ் சர்வீஸ் மீண்டும் கொண்டு வரப்பட்டது. அதேபோல் நேற்றுதான் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டார்.

அதேபோல் ராணுவ தளபதியாக முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டார். இதற்கு இடையில்தான் இந்த மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

English summary
Pakistan army attacks in Jammu Kashmir LOC: 2 Indian soldiers died in New Year Morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X