For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறுகிறது: பாகிஸ்தான் ராணுவ தளபதி புகார்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: எல்லைப் பகுதியில் இந்தியா தொடர்ந்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷரிப் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய எல்லையோரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரை ரஹீல் ஷரிப் நேற்று சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா தொடர்ந்து மீறி வருகிறது.

Pakistan army chief accuses India of repeated cease-fire violations

இந்தியாவின் இத்தகைய அத்துமீறல்களால் பயங்கரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் திசை திருப்பப்படுகின்றன. இந்தியாவின் எல்லையோர அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு அடுத்த வாரம் பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் அந்நாட்டு ராணுவ தளபதி இப்படி குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pakistan’s army chief General Raheel Sharif has warned neighboring India that any provocations on its part would exact a “befitting response” from Islamabad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X