For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இம்ரான் கான் எச்சரித்த அடுத்த நாளே அட்டகாசம்.. ஷெல் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்.. பதற்றம்

Google Oneindia Tamil News

Recommended Video

    இம்ரான் கான் எச்சரித்த அடுத்த நாளே பாகிஸ்தான் அட்டகாசம்

    ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் யூரி செக்டாரில், பாகிஸ்தான் ராணுவம் இன்று போர்நிறுத்தத்தை மீறி ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளது.

    இரவு 8.30 மணியளவில், கிருஷ்ண ஜென்மாஷ்டமியைக் கொண்டாட கோயில்களுக்கு மக்கள் வந்து கொண்டிருந்தபோது, ​​ஷெல் தாக்குதல் தொடங்கியதாக கிராம மக்கள் கூறுகின்றனர். ஷெல் தாக்குதலில் உயிர் அல்லது சொத்து இழப்பு குறித்து எந்த தகவலும் இல்லை.

    Pakistan Army on Tuesday violated ceasefire

    ஷெல் தாக்குதல்கள் குடியிருப்பு பகுதிகளில் பீதியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில நாட்களாகவே சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இப்போது ஷெல் தாக்குதலையும் ஆரம்பித்துள்ளது.

    சனிக்கிழமை மாலை, பட்டால் கிராமத்தை குறிவைத்து கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம், துப்பாக்கிச் சூடு நடத்தியது. சில குண்டுகள் கிராமத்திற்குள் வந்து விழுந்ததாக மக்கள் கூறுகிறார்கள். குடியிருப்பு பகுதியை குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியதாக, அவர்கள் நம்புகிறார்கள்.

    டிரம்ப் எடுத்த 2 அதிரடி முடிவுகள்.. இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது சிக்கலில் சிக்கி இருக்கு டிரம்ப் எடுத்த 2 அதிரடி முடிவுகள்.. இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது சிக்கலில் சிக்கி இருக்கு

    முன்னதாக ஆகஸ்ட் 23 ம் தேதி, ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறி சுட்டதில், ஒரு இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டார். ராஜோரி மாவட்டத்தின் நவ்ஷெரா செக்டாரில் பாகிஸ்தான் படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் நாயக் ராஜீப் தாபா கொல்லப்பட்டார்.

    நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆற்றிய தொலைக்காட்சி உரையில், காஷ்மீருக்காக எந்த எல்லைக்கும் செல்வோம், போர் வந்தால் உலக நாடுகள் அனைத்துக்குமே பாதிப்புதான் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Pakistan Army on Tuesday violated ceasefire along the Line of Control (LoC) in Uri sector.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X