For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்… பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி

Google Oneindia Tamil News

ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

2003 போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் ஒரே நாளில் 3 முறை தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

Pakistan Army unrest attacked; India strongly retaliates

நவ்சேரா மற்றும் சுந்தர்பாணி பகுதிகளில் காலை 10.30 மணி அளவில் தாக்குதலை பாகிஸ்தான் தொடங்கியது. சிறிய ரக ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கியால் தொடர்ந்து இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

இதனை அடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது என்று பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினல் கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறினார். மேலும், இந்திய இராணுவம் வலுவாக மற்றும் திறம்பட பதிலடி கொடுப்பதாகவும் அவர் கூறினார்.

10 நாளில் விதவை ஆன செல்ல மகள்.. ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை 10 நாளில் விதவை ஆன செல்ல மகள்.. ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை

கடந்த மாதம் 14ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் ஜம்மு காஷ்மீரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தீவிரவாத குழுக்களை சேர்ந்த பலர் களையெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 15 ஆண்டுகளில் 2018ஆம் ஆண்டு மட்டும் 2,936 முறை பாகிஸ்தான் ராணுவம் அதிகப்படியான தாக்குதல்களை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Jammu and Kashmir: 2003 ceasefire agreement with India in Rajouri district thrice on Wednesday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X