For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் எல்லையில் திடீர் என்று தாக்கும் பாக்.. வேகமாக விரைந்த இந்திய படை.. அதிரடி சண்டை!

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் தற்போது காஷ்மீர் எல்லையில் திடீர் என்று தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தற்போது அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதில் இருந்து மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. முக்கியமாக காஷ்மீர் எல்லையில் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத நிலை நீடித்து வருகிறது.

ஒரு பக்கம் சீனா அங்கு எல்லை மீறி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானும் இன்னொரு பக்கம் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.

பாகிஸ்தான் எச்சரிக்கை

பாகிஸ்தான் எச்சரிக்கை

இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் எந்த விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். காஷ்மீர் எல்லையில் என்ன நடந்தாலும் நாங்கள் அதை எதிர்கொள்வோம். இந்தியாவிற்கு நாங்கள் திருப்பி பதில் தாக்குதல் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டது.

என்ன தாக்குதல்

என்ன தாக்குதல்

இந்த நிலையில்தான் பாகிஸ்தான் ராணுவம் தற்போது காஷ்மீர் எல்லையில் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. காஷ்மீரில் உள்ள பூன்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

சரியாக எங்கு

சரியாக எங்கு

கிருஷ்ன காதி என்ற பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. இது பூன்ச் பகுதியில் இருந்து 11 கிமீ தூரத்தில் உள்ள கிராமம் ஆகும். காலை 11.30 மணிக்கு தொடங்கிய தாக்குதல் 3 மணி நேரமாக நீடித்து வருகிறது.

தெரியவில்லை

தெரியவில்லை

இதற்கு இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள். சண்டை எப்போது முடியும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதனால் அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

English summary
Pakistan attacks in KRISHNA GHATI sector in POONCH at about 11 am today. Indian Army retaliating.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X