For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் நிச்சயம் பலமாக திருப்பி அடிக்கும்.. முன்னாள் ராணுவத் தளபதி பாலி மேஜர்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய விமானப்படையின் அதிரடித் தாக்குதலால் நிச்சயம் பாகிஸ்தான் வெகுண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. நிச்சயம் அது தக்க பதிலடியைக் கொடுக்கும். ஆனால் இந்தியா எல்லை புகுந்து தாக்கியுள்ளதை அது மறுத்துள்ளதைப் பார்க்கும்போது அது இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க விரும்பவில்லை என்றே தெரிவதாக முன்னாள் விமானப்படை தலைமைத் தளபதி பாலி மேஜர் கூறியுள்ளார்.

இந்திய விமானப்படையும், ராணுவமும் இணைந்து பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து நடத்திய தாக்குதல் குறித்து முன்னாள் ராணுவ, விமானப்படைத் தளபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Pakistan can retaliate strongly, warns former IAF chief Fali major

இதுகுறித்து முன்னாள் விமானப்படை தலைமைத் தளபதி பாலி மேஜர் கூறுகையில், எனது உள்ளுணர்வு என்ன சொல்கிறது என்றால் நிச்சயம் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். நிச்சயம் உறுதியாகே கொடுக்க முயலும். இருப்பினும் இந்தியா எல்லை புகுந்து தாக்கவில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளதைப் பார்க்கும்போது அது இதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்பது போலத் தெரிகிறது.

இந்தியாவுடன் ராணுவ ரீதியான மோதலை பாகிஸ்தான் விரும்பவில்லையோ என்று கூட இதை எடுத்துக் கொள்ளலாம் என்றார் பாலி மேஜர்.

இந்தியா - பாகிஸ்தான் விவகாரங்கள் தொடர்பான நிபுணும், முன்னாள் தூதருமான விவேக் கட்ஜு கூறுகையில், இந்தியா தாக்கியதை பாகிஸ்தான் மறுத்துள்து. இது இந்தியாவுடனான மோதலை பெரிதுபடுத்த விரும்பவில்லை என்பதையே உணர்த்துவதாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
Former IAF chief Fali Major has warned that his gut says that Pakistan can retaliate strongly to the Indian attack in its soil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X