• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல் நாளில் இருந்தே சொன்னேன்.. கேட்டீங்களா.. பெரிய சதிங்க இது.. அம்ரிந்தர் சிங் காட்டம்

|
  முதல் நாளில் இருந்தே சொன்னேன்.. கேட்டீங்களா.. பெரிய சதிங்க இது.. அம்ரிந்தர் சிங் காட்டம்

  அமிர்தசரஸ்: முதல் நாளில் இருந்தே, பாகிஸ்தானின் மறைமுக திட்டத்தை, எச்சரித்து வருகிறேன் இப்போது அது உண்மையாகிவிட்டது என தெரிவித்துள்ளார், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங்.

  பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் பகுதியில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம்.

  அதற்காக, அங்கிருந்து இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம் வரை பாதை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்தன. அதன்படி, இரு நாடுகளும் அவரவர் பகுதியில் பாதை அமைத்துள்ளன.

  அவமானம்.. அதிபர் டிரம்ப்பை பார்த்து தவறான சைகை செய்த பெண்.. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி!

  குருநானக் பிறந்த நாள்

  குருநானக் பிறந்த நாள்

  சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் 550வது பிறந்தநாள் நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் வருவதற்காக, கர்தார்பூர் பாதையை திறந்து விடத்தயார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களுக்கு வரும் சீக்கிய மக்களுக்கு இனி அவர்கள் பாகிஸ்தான் வந்து சேர்ந்ததும் விசா அளிக்கப்படும். 20 டாலர் கட்டணமும் ரத்து செய்யப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் அறிவித்தார். பாகிஸ்தானின் இந்த தாராள உள்ளத்தின் பின்னணியில் சீக்கிய இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்கும் தந்திரம் இருக்க கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

  விஷமத்தன வீடியோ

  விஷமத்தன வீடியோ

  அதேபோலத்தான் இப்போது சம்பவங்கள் நடந்துள்ளன. பாகிஸ்தான், செய்தி ஒளிபரப்பு துறை வெளியிட்ட ஒரு வீடியோவில் அதன் விஷமத்தனம் வெளிப்பட்டுள்ளது. 4 நிமிட வீடியோவில், சீக்கிய புனித பயணிகள், பாகிஸ்தானிலுள்ள குருத்வாராவுக்கு வருகை தரும் காட்சியைக் காட்டியுள்ளனர். இந்த வீடியோ, பின்னணியில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பிந்த்ரான்வாலே, மேஜர் ஜெனரல் ஷாபேக் சிங் மற்றும் அம்ரிக் சிங் கல்சா ஆகியோரின் போஸ்டர்களும் உள்ளது.

  யார் இவர்கள்

  யார் இவர்கள்

  சீக்கிய மத பிரிவான தம்தாமி தக்சலின் தலைவராக பிந்த்ரான்வாலே இருந்தார். மேஜர் ஜெனரல் ஷபேக் சிங் இந்திய இராணுவ ஜெனரலாக இருந்தவர், அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஊழல் குற்றச்சாட்டில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் 1984 இல் சீக்கிய பிரிவினைவாத, காலிஸ்தானி இயக்கத்தில் சேர்ந்தார். அம்ரிக் சிங் கல்சா காலிஸ்தானிய மாணவர் அணி தலைவராக இருந்தார், அவர் தற்போது தடைசெய்யப்பட்டுள்ள, அகில இந்திய சீக்கிய மாணவர் கூட்டமைப்பின் (ஏ.ஐ.எஸ்.எஸ்.டி) தலைவராகவும் இருந்தார். 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமிர்தசரஸ் பொற்கோவிலில் இந்திய ராணுவம் நடத்திய, 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின்' போது மூவரும் கொல்லப்பட்டனர்.

  மூளைச்சலவை

  மூளைச்சலவை

  காலிஸ்தான் பிரிவினைவாதிகள் புகைப்படத்தை, சீக்கிய புனித தலத்திற்கான வீடியோவில் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் இளைஞர்களை, பாகிஸ்தான் மூளைச்சலவை செய்ய ஆரம்பித்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

  புலனாய்வு அமைப்புகள்

  புலனாய்வு அமைப்புகள்

  பஞ்சாபில் சீக்கிய பிரிவினைவாதத்தை புதுப்பிக்க பாகிஸ்தான், இந்த புனித பயண யாத்திரை பாதையை தவறாக பயன்படுத்தக்கூடும் என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தார். பல இந்திய புலனாய்வு அமைப்புகளும், நிபுணர்களும் கூட, இந்த பாதையைத் திறக்கும் பாகிஸ்தானின் நோக்கங்களை கேள்விக்குள்ளாக்கியிருந்தனர்.

  அம்ரிந்தர் சிங்

  அம்ரிந்தர் சிங்

  இன்று முதல்வர் அமரீந்தர் சிங் இதுகுறித்து அளித்த பேட்டியில், பாகிஸ்தான் சதித்திட்டத்தோடுதான் உள்ளது என்பதை நான், முதல் நாள் முதல் எச்சரித்து வருகிறேன். கடந்த 70 ஆண்டுகளாக புனித கர்தார்பூர் சன்னதிக்கு பாதையை திறக்குமாறு சீக்கிய சமூகம் கேட்டுக்கொண்டிருந்தது, ஆனால் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான பாகிஸ்தானின் திடீர் முடிவு, ஏதோ திட்டத்தோடுதான் இருந்தது. சீக்கிய சமூகத்தின் மத உணர்வுகளை சுரண்டி, தங்கள் சதி திட்டத்தை நிறைவேற்ற பாகிஸ்தான் முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

   
   
   
  English summary
  A video released by Pakistan on Monday to mark the opening of the Kartarpur Corridor showed posters of Khalistani separatist leaders Jarnail Singh Bhindranwale, Maj Gen Shabeg Singh and Amrik Singh Khalsa in the background in a clip.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X