For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒசாமாவை அமெரிக்கா கொன்றபோது சும்மா இருந்த பாக்.கிற்கு சவுண்ட பாரு: சிவசேனா சீண்டல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொலைசெய்த போது அமைதியாக இருந்த பாகிஸ்தான் இப்போது ஏன் சவுண்ட் விடுகிறது என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

Pakistan kept mum over Osama's killing by American troops: Shiv Sena

கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்த அல்கொய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடனை, அமெரிக்க ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி கொலை செய்தது. அப்போது அமெரிக்காவிற்கு எதிராக எந்தஒரு வார்த்தையும் பாகிஸ்தான், கூறவில்லை.

இந்நிலையில் மியான்மரில் புகுந்து இந்திய ராணுவம், தீவிரவாதிகளை சுட்டு கொலை செய்ததை கண்டித்துள்ளது பாகிஸ்தான்.

இதுகுறித்து சிவசேனா தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் கூறியுள்ளதாவது: இந்திய ராணுவம் மியான்மரில் எடுத்த அதிரடி நடவடிக்கையில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல், இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வார்த்தைகளை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.

அமெரிக்க ராணுவ வீரர்கள் உங்களுடைய நாட்டிற்குள் நுழைத்து, பின்லேடனை கொலை செய்தனர். அவனுடைய சடலத்தையும், உடமைகளையும் கொண்டு சென்றனர். அப்போது முற்றிலும் மவுனம் சாதித்தது தொடர்பாக நீங்கள் உடனடியாக உலகிற்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு சிவசேனா பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

"அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் போது எல்லாம் அமைதியாக இருக்கும் பாகிஸ்தான், இப்போது ஏன்? இந்தியாவிற்கு எதிராக தேவையில்லாத வாதங்களை முன்வைக்கிறது," என்று பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. "பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாதிகளால் இந்தியாவில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்படுகிறனர். மியான்மரில் ராணுவம் நடத்திய அதிரடி நடவடிக்கையானது இந்தியா இனி தீவிரவாதத்தை சகித்துக்கொள்ளாது" என்பதை காட்டுகிறது என்றும் சிவசேனா பாராட்டு தெரிவித்துள்ளது.

English summary
Taking a dig at Pakistan over its assertions in the wake of India's cross-border surgical strike in Myanmar, Shiv Sena on Friday said the neighbouring country should not make such comments when it had kept silent over the killing of Osama bin Laden by American troops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X