For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திடீரென கூடுதல் படைகளை எல்லைக்கு அனுப்பிய பாகிஸ்தான்.. உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா.. பதற்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: போர் பதற்றத்திற்கு இடையே பாகிஸ்தான் மற்றொரு படைப்பிரிவை எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இந்திய ராணுவம் இதை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பூஞ்ச் ​​பகுதிக்கு அருகிலுள்ள கோட்லி செக்டருக்கு பாகிஸ்தான் ஒரு படைப்பிரிவை புதிதாக அனுப்பியுள்ளதாம்.
இந்த படைப்பிரிவில் 2000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உள்ளனர்.

தற்போதைய நிலையில், ​அவர்கள் தாக்குதல் ஏதும் நடத்தவில்லை. இருப்பினும், இந்திய ராணுவம் அவர்களின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தன்னை புகழ்ந்து தள்ளிய, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஸ்டாலின் சொன்ன நச் பதில்!தன்னை புகழ்ந்து தள்ளிய, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஸ்டாலின் சொன்ன நச் பதில்!

பாகிஸ்தான் திட்டம்

பாகிஸ்தான் திட்டம்

இந்த படைப்பிரிவை பயன்படுத்தி எல்லையில் தாக்குதலை நடத்தி, பதற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்ய திட்டமிட்டிருக்கலாம் என தெரிகிறது. இப்படி செய்வதன் மூலம், பதற்றத்திற்கு நடுவே, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவச் செய்வது பாகிஸ்தான் ராணுவத்தின் திட்டம் என்று கூறப்படுகிறது.

பதற்றம்

பதற்றம்

காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிட பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இந்த நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டுக்கு நெருக்கமாக கூடுதல் படைகளை நகர்த்தியுள்ளது. இரு நாடுகளுக்கிடையில் சூழ்நிலை மிகவும் பதட்டமாக இருப்பதாக காட்டிக்கொள்வதன் மூலம் சர்வதேச கவனத்தையும் தலையீட்டையும் ஈர்க்க அந்த நாடு முயற்சிக்கிறது.

தீவிரவாதிகளுக்கு உடந்தை

தீவிரவாதிகளுக்கு உடந்தை

இதற்கு முன்பே, பாகிஸ்தான் 100 சிறப்புப் படை வீரர்களை (SSG) கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் நிறுத்தியிருந்தது. இந்த படையினர் தீவிரவாதிகளை, இந்தியாவிற்குள் ஊடுருவ உதவி செய்யும் பணியில் இருந்தனர். பாகிஸ்தானின் புதிய நடவடிக்கையை வைத்து பார்க்கும்போது அந்த நாடு புது தந்திரங்களோடு களமிறங்கியுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்தியா பதிலடி

இந்தியா பதிலடி

பாகிஸ்தான் அனுப்பியுள்ள 2000 கூடுதல் ராணுவ படையினர், இந்திய எல்லையில் இருந்து சுமார், 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை குறித்து இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல்களை, இந்திய வீரர்கள் உடனுக்குடன் முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Amid tensions over the Kashmir issue, Pakistan has moved almost a brigade-size force in the Bagh and Kotli sector close to the Line of Control (LoC) in Pakistan-occupied Kashmir (PoK).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X