For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'டிட்லி' புயல்.. யாரு வச்ச பேரு தெரியுமா?

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு டிட்லி என பெயரிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு டிட்லி என பெயரிடப்பட்டுள்ளது- வீடியோ

    டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு டிட்லி என பெயரிடப்பட்டுள்ளது.

    வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி உள்ளதால் ஒடிசா மற்றும் ஆந்திராவிற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    Pakistan only gave the name Titli for the Cyclone

    இதனையடுத்து ஒடிசா தலைமை செயலாளர் ஆதித்ய பிரசாத் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த புயலுக்கு டிட்லி என பெயர் வைத்தது பாகிஸ்தான் என தெரியவந்துள்ளது. டிட்லி என்பது உருது மொழி பெயராகும்.

    டிட்லி என்றால் பட்டாம் பூச்சி என, அர்த்தம். இந்திய பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் உருவாகும் புயல்களுக்கு வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் சார்பில், பெயர்கள் வைக்கப்படுகின்றன.

    அதன்படி, இந்திய பெருங்கடலின் வட பகுதியான, வங்கக் கடலில் உருவாகியுள்ள, 'டிட்லி' புயலுக்கு, பாகிஸ்தானின் பெயர் தேர்வாகியுள்ளது. பாகிஸ்தான் பெயர் வைத்த, அனைத்து புயல்களுமே இதுவரை பெரும் தாக்கத்தைதான் ஏற்படுத்தியுள்ளது.

    [ 4 வயது சிறுமிக்கு மண்டை ஓட்டை நீக்கிவிட்டு செயற்கை மண்டை ஓடு.. புனே மருத்துவர்கள் சாதனை! ]

    2005ஆம் ஆண்டு உருவான புயலுக்கு பனுாஸ் என பாகிஸ்தான் பெயரிட்டது. அதனை தொடர்ந்து, 'நர்கீஸ், லைலா, நீலம், நிலோபர் மற்றும் வர்தா' என, மொத்தம் ஆறு புயல்களுக்கு, பாகிஸ்தான் அளித்த பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளன. இதில், பனுாஸ் துவங்கி, வர்தா வரை, அனைத்து புயல்களும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Cyclone Titli scaring Odisha. Pakistan only gave the name Titli for the Cyclone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X