For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானிக்கு உயரிய விருது...பாகிஸ்தான் தீர்மானம்!!

Google Oneindia Tamil News

காஷ்மீர்: காஷ்மீர் பிரிவினைவாத முன்னாள் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு பாகிஸ்தான் நாட்டின் உயரிய விருதான நிஷான் இ பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமாபாத்தில் இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை சூட்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மேலவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் இந்த முடிவு காஷ்மீரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் கொடுத்த நெருக்கடியில் சமீபத்தில் ஹூரியத் அமைப்பின் தலைவர் பதவியை கிலானி ராஜினாமா செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் ஆக.31 வரை.. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே லாக்டவுன்.. முதல்வர் மம்தா அதிரடிமேற்கு வங்கத்தில் ஆக.31 வரை.. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே லாக்டவுன்.. முதல்வர் மம்தா அதிரடி

பாகிஸ்தான் நெருக்கடியா

பாகிஸ்தான் நெருக்கடியா

ஜம்மு காஷ்மீரில் இயங்கி வரும் பிரிவினைவாத அமைப்பான ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவராக இருந்தவர் சையத் அலி ஷா கிலானி. இவரது வயது 90. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் இந்த அமைப்பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த அமைப்பின் வாழ் நாள் தலைவர் என்று அறிவித்துக் கொண்டு இருந்த கிலானி ராஜினாமா செய்தார். இவரை ஓரம் கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாகிஸ்தான் முயற்சித்து வந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த அமைப்புக்கு கிலானிக்கு பதிலாக வேறு நபரை நியமிக்க வேண்டும் என்பது பாகிஸ்தானின் விருப்பம்.

கிலானி பெயர் தீர்மானம்

கிலானி பெயர் தீர்மானம்

இந்த நிலையில்தான் தற்போது ராஜினாமா செய்து இருக்கும் கிலானிக்கு பாகிஸ்தான் நாட்டின் உயரிய விருதான நிஷான் இ பாகிஸ்தான் விருதும், இஸ்லாமாபத்தில் இருக்கும் பல்கலைக்கழகத்துக்கு கிலானி பெயர் வைக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் அந்த நாட்டின் பள்ளி பாடங்களில் சேர்க்க வேண்டும். தேசிய, மாகாண அளவிலும் சேர்க்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மருத்துவ சீட்டில் ஊழல்

மருத்துவ சீட்டில் ஊழல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் ஹூரியத் அமைப்பின் தலைவர்கள் மீது கிலானி கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து இருந்தார். பாகிஸ்தான் மருத்துவக் கல்லூரிகளில் காஷ்மீர் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் இடங்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஹூரியத் தலைவர்கள் செயல்படுகின்றனர் என்று கிலானி குற்றம்சாட்டி இருந்தார். மேலும், இந்த அமைப்பில் தலைவர்களின் பதவி குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.

பாகிஸ்தான் நிராகரிப்பு

பாகிஸ்தான் நிராகரிப்பு

மேலும், முசராபாத்தில் இருக்கும் அமைப்பு ஹூரியத் அமைப்புக்கு கிலானி தன்னுடைய ஆதரவாளரான அப்துல்லா கிலானியை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்து இருந்தார். ஆனால், இவர் நிராகரிக்கப்பட்டு, வேறு நபர் நியமிக்கப்பட்டார். இவையெல்லாம் கிலானிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அஷ்ரப் செராய் கைது

அஷ்ரப் செராய் கைது

இதற்கிடையே, தனது செய்தி தொடர்பாளராக அப்துல்லா நீடிப்பார் என்று ஒரு கடிதம் எழுதி கிலானி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தார். காஷ்மீரில் ஹூரியத் அமைப்புக்கு தலைவராக அஷ்ரப் செராய் என்பவரை நியமிக்க வேண்டும் என்று கருதி இருந்த நிலையில் அவரும் நடப்பு மாதத்தின் துவக்கத்தில் கைது செய்யப்பட்டார். இது காஷ்மீரில் ஹூரியத் அமைப்புக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

English summary
Pakistan parliament passed a resolution to confer Ali Shah Geelani Nishan-e-Pakistan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X