For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் விவசாயிகளை கதறவைக்கும் 'காப்பான்' பட ஸ்டைல் பூச்சிகள்- பாக். ஏவிவிட்டதா?

Google Oneindia Tamil News

கட்ச்: குஜராத்தில் திடீரென பாகிஸ்தானில் இருந்து படையெடுத்த பல லட்சக்கணக்கான பூச்சிகள் வேளாண் பயிர்களை நாசமாக்கியதால் விவசாயிகள் பெரும் துயரை சந்தித்துள்ளனர். இந்த விவசாயிகளுக்கு உரிய நட்ட ஈடு வழங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

சூர்யா நடித்த காப்பான் திரைப்படத்தில் பாகிஸ்தானை பணிய வைக்க செயற்கையாக உருவாக்கப்பட்ட பூச்சிகளை ஏவி விவசாயத்தை நாசமாக்கலாம் என பிரதமர் மோகன்லாலுக்கு வில்லன் தொழிலதிபர் யோசனை கூறுவார். இதனை பிரதமராக நடித்த மோகன்லால் நிராகரிப்பார்.

Pakistan’s locust attack crops in North Gujarat

இதே பூச்சிகளை தஞ்சை டெல்டாவில் ஏவிவிட்டு விவசாயத்தை நாசமாக்கி அந்த நிலங்களை அபகரிக்க முயற்சிப்பார் வில்லன் தொழிலதிபர். இதனை சூர்யா முறியடிப்பார்.

Pakistan’s locust attack crops in North Gujarat

- இதே காட்சிகள்தான் இப்போது குஜராத்திலும் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் பாலைவனப்பகுதிகளில் இருந்து திடீரென பறந்துவந்த பல லட்சக்கணக்கான பூச்சிகள், வடக்கு குஜராத்தில் பெருமளவு வேளாண்பயிர்களை நாசமாக்கிவிட்டன.

Pakistan’s locust attack crops in North Gujarat

பனஸ்கந்தா, கட்ச், மெக்சானா, பதான், சபர்கந்தா ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக இப்பூச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒழிக்க மத்திய அரசின் 11 குழுக்கள் குஜராத்துக்கு விரைந்தன.

Pakistan’s locust attack crops in North Gujarat

இது தொடர்பாக கூறிய குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி, இப்பூச்சிகளை ஒழிக்க அரசு பூச்சி கொல்லி மருந்துகளை தெளித்து வருகிறது என தெரிவித்திருந்தார். வடக்கு குஜராத்தில் இத்தகைய பூச்சிகளின் படையெடுப்பு கடந்த மாதத்தில் 2 முறை நிகழ்ந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட வகையிலான, வேளாண் பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகள் அடுத்தடுத்து பல லட்சக்கணக்கில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து திடீரென படையெடுத்து வந்தது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

Pakistan’s locust attack crops in North Gujarat

2 மாதமாக என்ன செய்தார்? வைத்த டெஸ்ட்டில் பாஸ் செய்வாரா பிகே? தீவிரமாக ஆலோசிக்கும் ஸ்டாலின்!2 மாதமாக என்ன செய்தார்? வைத்த டெஸ்ட்டில் பாஸ் செய்வாரா பிகே? தீவிரமாக ஆலோசிக்கும் ஸ்டாலின்!

இயற்கையாகவே இத்தகைய பூச்சிகள் பறந்து வந்தனவா? அல்லது காப்பான் பட ஸ்டைலில் பாகிஸ்தான் நமது விவசாயிகள் மீது ஏவிவிட்ட மறைமுக தாக்குதலா? என்கிற கேள்விக்குத்தான் விடைகள் இல்லை.

English summary
Thousands swarms of locusts, from Pakistan attacked the Northern Gujarat Farmers crops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X