For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் எல்லைக்குள் வந்த பாக். விமானம்.. பதிலடிக்கு முயற்சி.. ஓட விட்ட இந்தியன் ஏர்போர்ஸ்!

இந்திய எல்லைக்குள் இன்று காலை நுழைய முயன்ற பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்று விரட்டி அடிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வெளுத்த 'மிராஜ்'..1000 கிலோ வெடி பொருட்கள்.. தீவிரவாத முகாம்கள் காலி.. வீடியோ

    காஷ்மீர்: இந்திய எல்லைக்குள் இன்று காலை நுழைய முயன்ற பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்று விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. இந்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க முயன்று அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு இருக்கிறது.

    இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை புகுந்து தாக்குதல் நடத்தியது. மிராஜ் 2000 ரக விமானங்கள் மூலம் இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா மீது உடனடியாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    உள்ளே வந்தது

    உள்ளே வந்தது

    அதன்படி இந்தியா தாக்குதல் நடத்தி 2.30 மணி நேரத்தில் பாகிஸ்தானின் போர் விமானமான எப்-16 (F-16) விமானம் இந்தியாவின் காஷ்மீர் எல்லைக்குள் வந்துள்ளது. 6.07 மணி அளவில் அந்த விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்தது. இந்தியாவில் தாக்குதல் நடத்தும் முடிவுடன் இந்திய எல்லைக்குள் விமானம் வந்துள்ளது.

    உஷார்

    உஷார்

    ஆனால் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதில் இருந்தே இந்திய ராணுவம் உஷார் நிலையில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாகிஸ்தான் விமானம் இந்திய எல்லைக்குள் புகுந்தது எளிதாக கண்டுபிடிக்கப்பட்டது. ரேடார் மூலம் பாகிஸ்தான் விமானம் காஷ்மீர் அருகே எல்லை தாண்டியது துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டது.

    அனுப்பியது

    அனுப்பியது

    இதையடுத்து அந்த விமானம் மீது இந்த விமானப்படை சிறிய பதில் தாக்குதலை நடத்தி இருக்கிறது. விமானத்தை திரும்பி செல்லும்படி எச்சரிக்கை விடுப்பதற்காக இந்த சிறிய தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து உடனடியாக அந்த பாகிஸ்தான் போர் விமானம் எந்த தாக்குதலும் நடத்தாமல் திரும்பி சென்றுள்ளது. இதனால் மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

    மிக முக்கியம்

    மிக முக்கியம்

    பாகிஸ்தானிடம் மொத்தம் இந்த எப்-16 ரக விமானங்கள் 40 இருக்கிறது. அதில் 32 விமானங்கள் செயல்படும் நிலையில் இருக்கிறது. இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் அதிகம் நம்பும் விமானம் இந்த எப்-16 ரக விமானம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Pakistan tried to retaliate with F16 jet: Indian Air Force responses in their style.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X