For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் பஞ்சாயத்து.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசிய கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்த கலெக்டர்!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பள்ளியில் தேசிய கொடியை ஏற்ற அனுமதி ஏன் கொடுத்தீர்கள், என்று கொந்தளித்துள்ள கேரளமாநில பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பள்ளி நிர்வாகம் ஒன்றுக்கு அனுப்பியுள்ள மெமோ பரபரப்பை ஏற்படு

By Devarajan
Google Oneindia Tamil News

பாலக்காடு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாலக்காடு மாவட்ட பள்ளி ஒன்றில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். அரசியல் தலைவர் எப்படி பள்ளியில் கொடி ஏற்றலாம் என்று அந்தப்பள்ளி நிர்வாகத்துக்கு பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மெமோ அனுப்பியுள்ளார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளமாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது கர்ணகியம்மன் பள்ளி. இந்தப்பள்ளியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார். இதற்கு மாவட்ட ஆட்சியர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

Palakkad District Collector issued a memo to the Karnakkiyamman School, for RSS Leader hoisting the National Flag

பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் உள்ளிட்ட மூத்த பிரதிநிதிகளை வைத்து கொடியேற்றம் நிகழ்த்தியிருக்கலாம் என்று அப்போது விமர்சனம் எழுந்தது. அதற்கு பாஜகவினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் கர்ணகியம்மன் பள்ளி நிர்வாகத்துக்கு மெமோ அனுப்பியுள்ளார். அதில், ' அரசியல் தலைவர் மோகன் பகவத், அரசு உதவி பெறும் பள்ளியில் தேசிய கொடி ஏற்றியது ஏற்கமுடியாத ஒன்று. பள்ளி ஆசிரியர் அல்லது மக்கள் பிரதிநிதிகள் யாரையாவது வைத்துதானே கொடி ஏற்றியிருக்க வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கேரளாவில் ஆளும் இடது சாரி அரசுக்கும், பாஜக உள்ளிட்ட மதவாத அமைப்புகளுக்கும் இடையே முட்டல் மோதல்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், மோகன் பகவத் பள்ளி விழாவில் தேசிய கொடி ஏற்றிய விவகாரம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The chief of the RSS, Mohan Bhagwat who was restrained from hoisting the Tricolour has now unfurled the flag at a school in Kerala. The Palakkad District Collector issued a memo to the Karnakkiyamman School, which said, "It is inappropriate for a political leader to hoist national flag in an aided school."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X