For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பனாமா பகிரங்கம்... வரித் திருட்டில் சிக்கிய டாப் 10 பிரபலங்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளவர்கள் பட்டியலில் பல முக்கியப் பிரபலங்களின் தலைகளும் உருளுகின்றன. அவற்றில் டாப் 10 பேரின் பட்டியல் இது.

மொசாக் பன்சிகா என்ற நிறுவனம் வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளவர்கள் பட்டியலை பனாமா நாட்டின் சட்ட நிறுவனத்திடம் இருந்து பெற்று வெளியிட்டுள்ளது. இதில், உலகம் முழுவதிலும் உள்ள ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்களின் ரகசிய ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உலக அளவில் பிரபலமான 500 பேரின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. அதில் இந்தியர்களும் அதிகம் உள்ளனர். அதில் பத்துப் பேரை இப்போது காணலாம்.

விக்கிலீக்ஸ் கசிவை விட பெரியது...

விக்கிலீக்ஸ் கசிவை விட பெரியது...

2013ம் ஆண்டு வெளியான விக்கிலீக்ஸ் லீக்கை விட இது பெரிதாக பார்க்கப்படுகிறது. கடந்த 1970களிலிருந்து பல ஆவணங்களை கொண்டுள்ளது இந்த பனாமா விவகாரம்.

2.6 டெர்ராபைட் டேட்டா...

2.6 டெர்ராபைட் டேட்டா...

இதில் 2.6 டெர்ராபைட் அளவிலான டேட்டாக்கள் உள்ளன. 11.5 மில்லியன் ஆவணங்கள் கசிந்துள்ளன. இதுதான் பெரும் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது. இதை கசிய விட்டவர் யார் என்பது தெரியவில்லை.

அமிதாப் பச்சன்...

அமிதாப் பச்சன்...

நடிகர் அமிதாப் பச்சன் கடந்த 1993ம் ஆண்டு குறைந்தது நான்கு கப்பல் நிறுவனங்களைத் தொடங்கினார். 1995ம் ஆண்டு அவர் அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் நிறுவனத்தையும் தொடங்கினார்.

ஐஸ்வர்யா ராய்...

ஐஸ்வர்யா ராய்...

அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய், அவரது தந்தை கோத் ரமணா ராய், தாயர் விருந்தா கிருஷ்ண ராஜ் ராய், அவரது சகோதரர் ஆதிய் ராய் ஆகியோர் 2005ம் ஆண்டு ஆமிக் பார்ட்னர்ஸ் நிறுவனத்தில் இயக்குநர்களாக இணைந்தனர். பின்னர் அதில் ஐஸ்வர்யாவின் பங்கு பங்குதாரராக மாற்றப்பட்டது. 2008ம் ஆண்டு இந்த நிறுவனம் கலைக்கப்பட்டு விட்டது.

சமீர் கெலாட்...

சமீர் கெலாட்...

இவரது பெயரும் இதில் உள்ளது. இவர் இந்தியா புல்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் ஆவார்.

கேபி சிங்...

கேபி சிங்...

டிஎல்எப் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மற்றும் தலைவராக இருப்பவர் கே.பி சிங் ஆவார்.

ஷபீர் பஜோரியா, அனுராக் கெஜ்ரிவால்...

ஷபீர் பஜோரியா, அனுராக் கெஜ்ரிவால்...

அரசியல்வாதிகளான ஷபீர் பஜோரியா மற்றும் அனுராக் கெஜ்ரிவால் ஆகியோரின் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது. லோக்சத்தா கட்சியின் டெல்லி கிளை தலைவராக இருந்தவர் கெஜ்ரிவால். 2014ல் இவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

அர்ஜென்டினா அதிபர் மாரிசியோ மாக்ரி...

அர்ஜென்டினா அதிபர் மாரிசியோ மாக்ரி...

இந்த பட்டியலில் அர்ஜென்டினா அதிபர் மாரிசியோ மாக்ரியும் இடம் பெற்றுள்ளார். பஹாமஸைச் சேர்ந்த பிளாக் டிரேடிங் என்ற நிறுவனத்தின் துணைத் தலவராக இயக்குநராக இரு்தவர் இவர்.

லியோனல் மெஸ்ஸி...

லியோனல் மெஸ்ஸி...

அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து சூப்பர் ஸ்டார் லியானல் மெஸ்ஸியின் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது. இவர் மீது ஏற்கனவே அவரது நாட்டில் பல வரி ஏய்ப்புப் புகார்கள் உள்ளன.

அபுதாபி மன்னர்...

அபுதாபி மன்னர்...

அபுதாபி மன்னரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபருமான கலீபா பின் ஜயத் அல் நஹாயன் பெயரும் இந்தப் பட்டியலில் உள்ளது.

நவாஸ் ஷெரீப்...

நவாஸ் ஷெரீப்...

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இந்த லிஸ்ட்டில்உள்ளார். இவரது மகன்களும், மகள்களும் இணைந்து பிரிட்டிஷ் வர்ஜின் தீவில் நிறுவனங்களைத் தொடங்கினர். மேலும் லண்டனில் சொத்துக்களையும் அவர் வாங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

புடினின் உதவியாளர்கள்...

புடினின் உதவியாளர்கள்...

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் உதவியாளர்கள் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இவர்கள் மிகப் பெரிய அளவில் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
500 Indians have been named in a massive leak of 11.5 million tax documents exposing their secret offshore dealings. An investigation by a daily claimed that Amitabh Bachchan and Aishwarya Rai Bachchan are also named in the massive leak of documents from the secret files of Mossack Fonseca, a law firm based in tax haven Panama.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X