For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைரல் வீடியோ.. எங்க புள்ள மேல கைவக்கிறீயா.. மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் மீது கடுமையாக தாக்குதல்

Google Oneindia Tamil News

Recommended Video

    மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் மீது கடுமையாக தாக்குதல்-வீடியோ

    சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் மாணவனை அடித்த ஆசிரியரை வகுப்பறையில் இருந்து இழுத்துவந்து பள்ளி வளாகத்தில் வைத்து மாணவனின் உறவினர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

    குஜராத் மாநிலம் சூரத்தின் சிம்டா பகுதியில் ஆஷாதீப் என்ற மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தான் மாணவனை ஆசிரியர் அடித்ததற்காக அந்த மாணவனின் பெற்றோர் ஆசிரியரை அடித்து உதைத்து உள்ளனர்.

    கடந்த செவ்வாய்கிழமை சூரத்தின் ஆஷாதீப் பள்ளியில் 12 வகுப்பு மாணவர்கள் சிலர் கழிவறையில் விளையாடி கூச்சலிட்டு சேட்டைகளை செய்திருக்கிறார்கள்.

    ஆசிரியர் அடித்தார்

    ஆசிரியர் அடித்தார்

    இது பற்றி ஒரு மாணவனை அழைத்து விசாரித்துள்ளார் ஆசிரியர் விபுல் கஜாரே. அதன் பின்னர் அந்த மாணவனை கன்னத்தில் பளார் பளார் என அறைந்திருக்கிறார். இந்த காட்சி பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. மேலும் பாட வேளையில் வகுப்புக்கு வெளியே நிற்கும்படி ஆசிரியர் விபுல் கஜாரே மாணவருக்கு தண்டனை கொடுத்துள்ளார். இதனால் வேதனை அடைந்த அந்த மாணவன், மற்றவர்கள் செய்த தவறுக்கு என்னை ஆசிரியர் அடித்துவிட்டதாக பெற்றோரிடம் சொல்லியிருக்கிறான்.

    ஆசிரியர் மீது தாக்குதல்

    ஆசிரியர் மீது தாக்குதல்

    இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், புதன்கிழமை அதாவது நேற்று தங்களது உறவினர்களுடன் பள்ளிக்கு சென்றனர். அங்கு வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் விபுல் கஜாரேவை இழுத்து போட்டு அடிக்க ஆரம்பித்துள்ளனர். பின்னர் பள்ளி வளாகத்தில் இழுத்துபோட்ட அவர்கள் யாரையும் பேசவிடாமல் சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள்.

    சிசிடிவி காட்சி பதிவு

    அருகில் இருந்த சக ஆசிரியர்கள் நெருங்க முடியாமல் மிரட்டியபடி ஆசிரியரை கடுமையாக தாக்கி உள்ளார்கள் மாணவனின் உறவினர்கள். இதில் படுகாயம் அடைந்த அந்த ஆசிரியர் கஜோரா மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சூரத் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியரை மாணவனின் பெற்றோர் தாக்கும் வீடியோ காட்சி பள்ளியில் உள்ள சிசிடிவில் பதிவாகி உள்ளது.

    பள்ளி நிர்வாகம் முடிவு

    பள்ளி நிர்வாகம் முடிவு

    இதனிடையே மாணவனை தாக்கிய ஆசிரியர் காஜாரேவை பள்ளியில் இருந்து நீக்க பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கஜிராவை தாக்கிய மாணவனின் பெற்றோர் மற்ற மாணவர்களின் முன்னிலையில் மோசமான வார்த்தைகளால் ஆசிரியரை பேசியதாகவும் ஆஷதீப் பள்ளித் தலைவர் மகேஷ் ரமணி தெரிவித்தார். இதனிடையே யாரோ சில மாணவர்கள் செய்த குறும்புக்கு எங்கள் பிள்ளையை ஆசிரியர் அடித்துவிட்டதாகவும் அதனால் தான் அடித்ததாகவும் பெற்றோர் கூறியுள்ளனர்.

    English summary
    shocking incident: Parents and friends thrash teacher who assaulted Class 12 student in Surat
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X