For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மானிய சிலிண்டர் எண்ணிக்கையை குறைக்க பாரிக் குழு பரிந்துரை

By Siva
Google Oneindia Tamil News

LPG
டெல்லி: டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தவும், மானிய சிலிண்டரின் எண்ணிக்கையை குறைக்கவும் கிரித் பாரிக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்தது. இந்நிலையில் டீசல் மற்றும் சமையல் எரிவாய்வு விலை நிர்ணயம் குறித்து ஆய்வு செய்ய கிரித் பாரிக் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

அந்த கமிட்டி தனது ஆய்வறிக்கையை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் சமர்பித்தது. அதில் டீசல் விலையை உடனடியாக ரூ.5 உயர்த்தவும், தற்போது மானிய விலையில் கிடைக்கும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து 6 ஆக குறைக்கவும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது. தற்போது மானிய விலையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு பாரிக் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தவும், சிலிண்டருக்கு ரூ.250 விலை உயர்த்தவும் பரிந்துரைத்துள்ளோம் என்றார்.

English summary
Diesel prices should be immediately hiked by Rs 5 per litre, the Kirit Parikh Committee has recommended while favouring reduction of the quota of subsidised LPG to 6 cylinders per household in a year from 9 at present.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X