For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கானா விவகாரம், மீனவர் பிரச்சினை இன்றும் முடங்கியது நாடாளுமன்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Parliament adjourned till noon over the formation of Telangana
டெல்லி: நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, தெலங்கானா, தமிழக மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

வருகிற மே மாதத்துடன் நடப்பு நாடாளுமன்ற மக்களவையின் பதவி காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் 15வது நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் கடந்த 5ம் தேதி தொடங்கியது.

மக்களவை இன்று காலை கூடியவுடன் தமிழக மீனவர் பிரச்னையை எழுப்பியும், தெலங்கானா தனி மாநில உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். அவை முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் கூடிய போதும் அமளி நீடித்ததால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் மீராகுமார் உத்தரவிட்டார். மக்களவை தொடர்ந்து 5-வது நாளாக முடங்கியது.

இதே போல் மாநிலங்களவையிலும், கடும் அமளி நீடித்தது. அவை கூடியவுடன் தெலங்கானா விவகாரம் எதிரொலித்தது. முதலில் 11.11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடிய போது, தமிழக மீனவர்கள் பிரச்சினையை முன்வைத்து அதிமுக எம்.பி. மைத்ரேயன், அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினார்.

English summary
Both houses of Parliament were adjourned on Tuesday till noon following an uproar over the formation of Telangana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X