For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத்தில் காஸ்ட்ரோவுக்கு இரங்கல்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மறைந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

டெல்லி : நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மறைந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கு எம்பிக்கள் இரங்கல் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்புக்கு பின்னர் கூட்டத் தொடர் தொடங்கியதால் எதிர்க்கட்சிகள் நடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.

Parliament mourns former Cuban President Fidel Castro

நாட்டில் பெரும் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப்பெறுமாறு வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக எம்பிக்கள் அமளில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மறைந்த கியூபா முன்னாள் அதிபருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. லோக் சாப, ராஜ்ய சபா ஆகிய இரு அவைகளிலும் எம்பிக்கள் இரங்கல் தெரிவித்தனர். அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.

English summary
In both the houses of the Parliament, rich tributes paid to the latge former Cuban President Fidel Castro. MPs paid tribute to the late leader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X