For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15ம் தேதி தொடங்கும்.. மத்திய அரசு அறிவிப்பு

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு தற்போது குடியரசு தலைவர் பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

எல்லாவருடமும் சரியாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். இதுவரை வருடம் தவறாமல் இந்த கூட்டத்தொடர் சரியாக நடந்து வந்து இருக்கிறது.

Parliament winter session date for 2017 has announced

இந்த ஆண்டு நடக்க வேண்டிய குளிர்கால கூட்டத்தொடர் குறித்த எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடமால் காலம் தாழ்த்தி வந்தது. பாஜகவின் இந்த காலதாமதத்திற்கு குஜராத் தேர்தலும் ஒரு காரணம் எனப்பட்டது.

இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுப்பதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்த்தப்பட்டது. அதில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சரியாக டிசம்பர் 15ம் தேதி முதல் தொடங்கும் என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

டிசம்பர் 15-ம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர் ஜனவரி 5-ம் தேதி வரை நடக்கும் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவு தற்போது குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

English summary
Parliament winter session date for 2017 has been announced by central government. Parliament winter session will start on December 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X