For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'முதல் மனைவி' விவாகரத்தை 'முதல் முறையாக' வேட்புமனுவில் ஒப்புக் கொண்டார் பாஸ்வான்!

By Mathi
|

பாட்னா: லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் முதல் மனைவியை தாம் விவகாரத்து செய்ததை முதல் முறையாக தமது வேட்புமனுவில் ஒப்புக் கொண்டு ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் எந்த ஒரு இடத்தையும் பூர்த்தி செய்யாமல் விட்டால் அவர்களது வேட்புமனுக்களை நிராகரிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த கெடுபிடியான அறிவுறுத்தலால் இத்தனை காலம் தமக்கு திருமணம் ஆன விஷயத்தையே குறிப்பிடாமல் வந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதல் முறையாக தமக்கு திருமணம் ஆகிவிட்டது என்று உண்மையை ஒப்புக் கொள்ள நேரிட்டது. இது இன்றளவும் சர்ச்சையாக இருந்து வருகிறது.

Paswan discloses he divorced first wife in 1981

இந்த நிலையில் பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான லோக் ஜன சக்தியின் தலைவரும் இப்படி ஒரு இடியாப்ப சிக்கலில் மாட்டி மீண்டிருக்கிறார். பீகார் மாநிலம் ஹாஜிபூர் தொகுதியில் பாஸ்வான் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்புமனுவில் முதல் மனைவியை விவகாரத்து செய்த விவரம் தெரிவிக்கப்படவில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஏஜெண்ட் ஆட்சேபனை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாஸ்வான் தரப்பு வழக்கறிஞர்கள் அவசரம் அவசரமாக 1981ஆம் ஆண்டு பாஸ்வான் தமது முதல் மனைவியை விவகாரத்து செய்தது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

1960ஆம் ஆண்டுகளில் ராஜ்குமாரி என்பவரை பாஸ்வான் திருமணம் செய்து கொண்டார். அவர் 1977ஆம் ஆண்டு முதல் முறையாக எம்.பி.யாகும் வரை மனைவியுடன் இருந்தார் பாஸ்வான். அதன் பின்னர் 1983ஆம் ஆண்டு ஹரியானாவை சேர்ந்த ரீனா என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார் பாஸ்வான். இவர்களுக்குப் பிறந்த மகன் சிராக்தான் தற்போது அரசியலில் குதித்துள்ளார். ஜமோய் தொகுதியில் சிராக் போட்டியிடுகிறார்.

முதல் மனைவி மூலமாக பாஸ்வானுக்கு உஷா, ஆஷா என்ற இரு மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகிவிட்டனர். முதல் மனைவியை பற்றி தமது வேட்புமனுக்களில் குறிப்பிடாத பாஸ்வான் முதல் மனைவிக்கு பிறந்த மகள்களை மட்டும் வாரிசுகளாகவும் குறிப்பிட்டு வந்தார்.

தற்போது ஐக்கிய ஜனதா தளம் சர்ச்சையை எழுப்பியதைத் தொடர்ந்து முதல் மனைவியை விவாகரத்து செய்ததை பகிரங்கப்படுத்தியிருக்கிறார் பாஸ்வான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
LJP chief Ram Vilas Paswan disclosed for the first time that he divorced his first wife in 1981 after Bihar’s ruling JD-U challenged his nomination affidavit over his marital status.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X