For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கான்பூர் ரயில் விபத்து: பிரதமர் ரூ.2 லட்சம்... ரயில்வே ரூ.3.50 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

கான்பூர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாயும் ரயில்வே அமைச்சர் 3.50 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் புக்ரையான் என்ற இடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நஷ்டஈடு அறிவித்துள்ளனர்.

பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் உத்தரப்பிரதேச மாநிலம் புக்ரையான் என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 14 பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று மோதியதில் பெட்டிகள் உருக்குலைந்து போயின. சின்னாபின்னமான பெட்டிகளில் இருந்து இதுவரை 63 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Patna - Indore train derailed : ex-gratia of 3.5 lakh for the families of the deceased and Rs 50,000 for those critically injured : Union Railway Minister suresh prabhu.

விபத்துக்குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. பெட்டிகள் குறுக்கும் நெடுக்குமாக சிதறி கிடப்பதால் அந்த தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதேபோல் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 3.50 லட்சமும் , பலத்த காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவும் விபத்தில் சிக்கியவர்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாயும் படுகாயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மத்தியப்பிரதேச அரசும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50000 ரூபாயும் இழப்பீடு அறிவித்துள்ளது.

English summary
PM Modi announced Rs.2 lakh for the families of the deceased and Rs 50000 for those critically injured in the train accident. Union Railway Minister Suresh Prabhu also announced an ex-gratia of Rs3.5 lakh for the families of the deceased, and Rs.50,000 for those critically injured in patna-indore Express derailment. UP and MP governments also announced Ex-gratia for those suffered in Kanpur Train accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X