For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிக்கிம் முதல்வர் யார் தெரியுமா?... அவர் செய்த சாதனையாவது தெரியுமா?

நீண்டகாலம் முதல்வராக இருந்த ஜோதிபாசுவின் சாதனையை சிக்கிமின் பவன் சாம்லிங் முறியடித்தார்.

Google Oneindia Tamil News

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் தற்போதைய முதல்வர் யார் தெரியுமா? எந்த பொது அறிவு தேர்வில் இந்தக் கேள்வியைக் கேட்டாலும் கடந்த 23

ஆண்டுகளாக ஒரே பதில்தான். சிக்கிமின் முதலவர் பவன் சாம்லிங் இந்திய அரசியல்வாதிகளில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். தொடர்ந்து அதிக ஆண்டுகள் மாநில முதல்வராக இருந்த சாதனையை அவர் பெற்றுள்ளார்.

Pawan chamling becames the longest serving chief minister

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் முதல்வராக உள்ளார் பவன் சாம்லிங். சிக்கிம் ஜனநாயக முன்னணியின் தலைவராக அவர், 1994 டிசம்பர் 12ல் முதல்வரானார். அதன்பிறகு தொடர்ந்து ஐந்தாவது முறையாக அவர் ஆட்சி புரிந்து வருகிறார். நீண்ட காலம் முதல்வராக இருந்த மேற்கு வங்க முன்னாள்

முதல்வர் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் சாதனையை சாம்லிங் இன்று முறியடித்துள்ளார்.

23 ஆண்டுகள் 4 மாதங்கள், 17 நாட்கள் முதல்வராக இருந்த ஜோதிபாசுவின் சாதனை இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. ஜோதிபாசு 1977 முதல் 2000ம் ஆண்டு வரை தொடர்ந்து ஐந்து முறை முதல்வராக பணியாற்றினார். உடல்நிலை காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.

தற்போது 68 வயதாகும் சாம்லிங், 1985ல் முதல் முறையாக எம்எல்ஏவானார். 1994ல் முதல் முறையாக முதல்வரானார். சிக்கிம் மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக தலைவர் கருணாநிதி 18 ஆண்டுகள் 9 மாதங்கள் 23 நாட்களுக்கு முதல்வராக இருந்துள்ளார்.

English summary
Sikkim chief minister pawan chamling creates new record of longest serving chief minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X