For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்பறம், கோழி முட்டை போட்டுச்சா.. அதை என்ன செஞ்சே.. செல்போன்ரோமிங் கட்டணம் குறைகிறது!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: செல்போன் ரோமிங் கட்டணங்களை மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ரோமிங் அழைப்புகளுக்கான கட்டணம் 23 சதவீதமும், எஸ்.எம்.எஸ். கட்டணம் 40 சதவீதமும் குறையும். மே 1ம் தேதி முதல் இந்த திருத்தியமைக்கப்பட்ட கட்டண முறை நடைமுறைக்கு வருவதாக டிராய் அறிவித்துள்ளது.

இது குறித்து டிராய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய ரோமிங் சேவை கட்டணங்கள் கடந்த 2013ம் ஆண்டு கடைசியாக மாற்றியமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது ரோமிங் சேவைக்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, குறிப்பிட்ட சேவைகளுக்கான கட்டணங்களுக்கு அதிகபட்ச உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Pay 23% less for roaming from May 1

தற்போது செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களின் ரோமிங் சலுகை திட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு மாற்றாக சிறப்பு ரோமிங் கட்டண திட்டங்களை கொண்டு வரலாம். அதன்படி ரோமிங்கில் இருக்கும்போது, உள்ளூர் அழைப்புக்கான கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1 என்பது 80 காசுகளாக குறைக்கப்படுகிறது.

வெளியூர் அழைப்புகளுக்கான கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1.50 என்பது ரூ.1.15ஆக குறைக்கப்படுகிறது. ரோமிங்கின்போது வரும் அழைப்பு ஏற்கும்போது (இன்கம்மிங் ) தற்போது நிமிடத்துக்கு 75 காசுகளாக உள்ள கட்டணம் 45 காசுகளாக குறைக்கப்படுகிறது. உள்ளூர் எஸ்.எம்.எஸ். ஒன்றுக்கு தற்போது உள்ள ரூ.1 என்று உள்ள கட்டணத்தை அதிகபட்சமாக ஒரு எஸ்.எம்.எஸ்.க்கு 25 காசுகளாக குறைக்கப்படுகிறது. வெளியூர் எஸ்.எம்.எஸ். கட்டணம் ரூ.1.50ல் இருந்து 38 காசுகளாக குறைக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
There is good news for frequent travellers who complain about hefty roaming mobile bills. TRAI or the telecom Regulatory Authority of India has cut the ceiling tariff for national roaming service to 80 paise per minute for outgoing local calls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X