For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேடிஎம் வாலட், பேடிஎம் வங்கி: இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: பேடிஎம் தற்போது பேடிஎம் வங்கியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் தீவிரம் அடையும் நேரத்தில் பேடிஎம்(Paytm) மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்க, கட்டணம் செலுத்த, ரீசார்ஜ் செய்ய, பணப் பரிமாற்றம் செய்ய பேடிஎம் வாலட்டை பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பேடிஎம் வங்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேடிஎம் வாலட்டை பயன்படுத்த பேடிஎம் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.

Paytm Wallet Vs Paytm Payments Bank, All That You Should Know

பேடிஎம் வாலட் மற்றும் பேடிஎம் வங்கி பற்றி தெரிந்து கொள்வது நல்லது.

டெபிட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி பேடிஎம் வாலட்டில் பணம் போட்டு அதை பயன்படுத்தலாம். அதற்கு இன்டர்நெட்டும், பேடிஎம் ஆப்பும் தேவை. நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரை பரிவர்த்தனை செய்யலாம், விஐபியாக பதிவு செய்து ரூ. 1 லட்சம் வரை பயன்படுத்தலாம்.

பேடிஎம் வங்கியும் இதே போன்று தான் வேலை செய்கிறது. பேடிஎம் வங்கி வழக்கமான வங்கிகளை போன்று செயல்படும் ஆனால் ஆன்லைனில் மட்டுமே. பேடிஎம் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டோ, கடனோ அளிக்காது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு வெர்ச்சுவல் டெபிட் கார்டு அளிக்கப்படும். அதை வைத்து பிற வங்கி கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யலாம் அல்லது பணம் எடுக்கலாம்.

பேடிஎம் வங்கியில் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யுபிஐ பரிவர்த்தனைகள் வசதி உள்ளது. ஒருவர் ரூ. 1 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

தற்போது துவக்கமாக இன்வைட் அடிப்படையில் பேடிஎம் வங்கி கணக்கு துவங்கப்படுகிறது. ரெஜிஸ்டர் செய்ய நாடு முழுவதும் கேஒய்சி மையங்களை துவங்கியுள்ளது பேடிஎம். வாலட்டுக்கு பேடிஎம் இணையதளத்தில் சென்று அவர்களின் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்ய வேண்டும்.

இ-வாலட்டில் வட்டி கிடைக்காது ஆனால் பேடிஎம் வங்கியில் அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கும் ஆண்டுக்கு 4 சதவீத வட்டி கிடைக்கும். குறைந்தபட்ச இருப்பு தொகை எல்லாம் கிடையாது. ஆன்லைன் பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை. உடனே பேடிஎம் வங்கியில் கணக்கு துவங்குங்கள்.

அருமையான சலுகைகளுக்கு ஒன்இந்தியா கூப்பன்ஸ்(Oneindia Coupons) இணையதளத்திற்கு செல்லுங்கள்.

English summary
Being India's largest mobile payments and commerce platform, 'Paytm' provides an easy access to electronic payment solutions. Now 'Paytm' introduced 'Paytm Payment Bank' to gift its customers with more options for everyday dealings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X