For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கியதால் மக்கள் கொண்டாட்டம்.. சுதந்திர தின உரையில் மோடி மகிழ்ச்சி!

ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை நாடு முழுக்க மக்கள் கொண்டாடி வருகிறார்கள் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சுதந்திரம் போற்றுவோம்..! சுதந்திரத்தை காப்போம்..!

    டெல்லி: ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை நாடு முழுக்க மக்கள் கொண்டாடி வருகிறார்கள் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது. இந்திய பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரம் அடைந்தது.

    இதையடுத்து இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார். பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்கள் மரியாதை அளித்தனர்.

    என்ன நடந்தது

    பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்கள் மரியாதை அளித்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் செங்கோட்டை சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டனர் .

    கொடி ஏற்றியுள்ளார்

    கொடி ஏற்றியுள்ளார்

    6வது முறையாக பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி மக்கள் மத்தியில் உறையியற்றினார். பிரதமர் மோடி தனது உரையில், இந்த நல்ல நாளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கிறேன்.

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    மத்திய, மாநில அரசுகள் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது.சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூற வேண்டும். நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை நினைவு கூற வேண்டும். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர்

    நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய எல்லோருக்கும் நன்றி. மீண்டும் இங்கு கொடி ஏற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இதன் மூலம் நாம் சர்தார் வல்லபாய் பட்டேலில் கனவை நினைவாக்கி உள்ளோம்.

    மக்கள்

    மக்கள்

    நாடு முழுவதும் மக்கள் இதை பெரிய அளவில் வரவேற்றுள்ளனர். அனைத்து பிரிவினருக்கும் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அனைத்து மக்களும் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு அடைய வேண்டிய வளர்ச்சியை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்.

    English summary
    People are celebrating Jammu Kashmir move says PM Modi in Red Fort Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X