For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸ் எதிர்க்கட்சியாகச் செயல்படுவதைக்கூட மக்கள் விரும்பவில்லை: உத்தவ் தாக்கரே

Google Oneindia Tamil News

நாக்பூர்: காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக செயல் படுவதைக் கூட மக்கள் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார் சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில், 4 மாநிலங்களில் காங்கிரச் தோல்வியைத் தழுவியது. மூன்று முறை ஆட்சி செய்த டெல்லி பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், இதுகுறித்து நேற்று நாக்பூரில் சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:-

2014 தேர்தலுக்கு பிறகு மோடி அலை தேசியத்தை வென்றுள்ளது என்பது முழுமையாக உறுதிசெய்யப்படும். ஆளும் கட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். அவர்கள் அரசின் மீது நம்பிக்கையிழந்துள்ளனர்.

People don't want Congress even in Opposition: Shiv Sena

தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரும் வலுவான கூட்டணியாக உருவெடுக்கும். ஷீலா தீட்சித்தை கெஜ்ரிவால் வெல்லுவார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். எதிர் கட்சியாகக்கூட காங்கிரஸ் கட்சி இருக்க மக்கள் அனுமதிக்கவில்லை. ஆகையால், தேர்தலுக்கு பிறகு எதுவும் சாத்தியமே.

லோக்பால் மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம். ஏனெனில், லோக்பால் தவறாக போனால், அனைத்து அதிகாரமும் இந்திய ஜனாதிபதியிடம் சென்று சேரும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The recently-concluded assembly elections in four states indicate that people want a change and don't want Congress to sit even in the opposition, Shiv Sena executive president Uddhav Thackeray said on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X