For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வலிமையான இந்தியா அமைய வேண்டுமா... மீண்டும் மோடி பிரதமர் ஆக வேண்டும்... சொல்வது அமித்ஷா

Google Oneindia Tamil News

Recommended Video

    வலிமையான இந்தியா அமைய வேண்டுமா?.. அமித்ஷா யோசனை- வீடியோ

    சிம்லா: இந்தியாவில் வலிமையான அரசு அமைய மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக பா.ஜ.க. தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    மேலும், ஒரே வேலை-ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நிறைவேற்றியது என்றார்.

    இமாச்சலப்பிரதேசம் மாநிலம், உனா நகரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது:

    ஏழைகளுக்கு பயன்

    ஏழைகளுக்கு பயன்

    பிரதமரின் ஜன்தன் யோஜானா, ஆயுஷ்மான் பாரத், கரினி சுப்விதா யோஜானா ஆகிய திட்டங்களின் மூலம் ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

    விமர்சனம்

    விமர்சனம்

    கடந்த 55 ஆண்டுகால காங்கிரஸ் கட்சி ஆட்சியில் வறுமையை ஒழிக்க ஏதாவது செய்ததா ? என்று கேள்வி எழுப்பிய அமித்ஷா இப்போது, வறுமையை ஒழிக்க போவதாக ராகுல் பேசுவதாக விமர்சனம் செய்தார். அனைத்து வீடுகளுக்கு ஒரு சமையல் எரிவாயுவைக் கூட அவர்கள் கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

    குடும்ப ஆட்சி முறை

    குடும்ப ஆட்சி முறை

    ராணுவ வீரர்கள் பயன்பெற ஒன் ரேங்க் ஒன் பென்சன் என்ற திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்ததாகக் கூறி அவர், காங்கிரஸ் ஆட்சியில் ஒன்லி ராகுல், ஒன்லி பிரியங்கா என குடும்ப ஆட்சி முறையை மறைமுகமாக விமர்சித்தார்.

    பிரேக் இன் இந்தியா

    பிரேக் இன் இந்தியா

    பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை நிறைவேற்ற பாடுபடும் நிலையில், ராகுல் காந்தி பிரேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.

    English summary
    People expect the Modi come back as prime minister BJP Leader Amit Shah said
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X