For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விசாகப்பட்டினம் கேஸ் கசிவு.. கொத்து கொத்தாக சாலையில் விழுந்த மக்கள்.. உணர்வற்ற நிலையில் குழந்தைகள்!

Google Oneindia Tamil News

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷ வாயு கசிந்து 8 பேர் இறந்ததை அடுத்து அந்த வாயுவை சுவாசித்த 200க்கும் மேற்பட்டோர் நடந்து வரும் போதே மயங்கி விழும் காட்சிகள் பதற வைக்கின்றன.

Recommended Video

    Major Gas Leak At Andhra Plant

    விசாகப்பட்டினத்தில் தென்கொரியாவைச் சேர்ந்த எல்ஜி பாலிமர்ஸ் இந்தியா கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இங்கு பிளாஸ்டிக்குகளை உருவாக்கும் பாலிஸ்டைரின் தயார் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 40 நாட்கள் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு இன்று இந்த ஆலை திறக்கப்பட்டது. அப்போது பெரிய உலைகளில் இருந்து ஸ்டைரின் எனும் விஷ வாயு அதிகாலை 2.30 மணிக்கு வெளியேறியது.

    5000 டன் டேங்குகள்.. லாக்டவுனால் வந்த வினை.. விசாகப்பட்டினம் விஷ வாயு விபத்துக்கு இப்படி ஒரு காரணமா?5000 டன் டேங்குகள்.. லாக்டவுனால் வந்த வினை.. விசாகப்பட்டினம் விஷ வாயு விபத்துக்கு இப்படி ஒரு காரணமா?

    மூச்சுத் திணறல்

    மூச்சுத் திணறல்

    இதனால் அந்த ஆலையை சுற்றி 3 கி.மீ தூரம் கொண்ட மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்த விபத்தில் குழந்தை உள்பட 8 பேர் பலியாகிவிட்டனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டாக்டவுனால் பயன்படுத்தப்படாமல் ஆலை இருந்ததாலேயே இந்த கேஸ் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. நீண்ட நாட்களாக 5000 டன் கொண்ட இரு டேங்க்களை பயன்படுத்த முடியவில்லை. இதனால் வெப்பம் அதிகரித்து ரசாயன மாற்றம் ஏற்பட்டதால் கேஸ் கசிவு உண்டானதாக ஆலை தரப்பில் கூறப்படுகிறது.

    ஆம்புலன்ஸ்

    ஆம்புலன்ஸ்

    வாயு கசிவு ஏற்பட்டதும் வீட்டுக்குள் இருக்க முடியாத மக்கள் வெளியே ஓடி வந்தனர். இவர்களுக்கு கண் எரிச்சலும் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மீட்பு படையினர் ஆம்புலன்ஸ்களை வரவழைத்து மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல குழந்தைகளை பொதுமக்கள் தூக்கிக் கொண்டு ஓடி வந்த காட்சி நெஞ்சை உருக்கியது.

    தந்தை, தாய்

    தந்தை, தாய்

    அத்தோடு பெரியவர்கள் சாலைகளில் நடந்து வரும் போதே கொத்து கொத்தாக கீழே விழுந்தனர். சாக்கடைகள், சந்து பொந்துகளில் எல்லாம் மக்கள் எந்த அசைவுமின்றி விழுந்து கிடக்கிறார்கள். குழந்தைகளை ஆம்புலன்ஸில் படுக்க வைத்து அவர்களது தந்தையும் தாயும் இதயம் இருக்கும் பகுதிகளில் அழுத்தி விடுகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்களுக்காக சாலைகளில் மக்கள் காத்திருக்கின்றனர்.

    மூச்சுத் திணறல்

    மூச்சுத் திணறல்

    இரு சக்கர வாகனத்தில் அழைத்து வரப்பட்ட பெண், நடைமேடையில் அப்படியே சரிந்து விழுந்தார். அந்த ஆலையை சுற்றியிருக்கும் இடமே அப்படியே போர்க் களம் போல் காட்சியளித்தது. யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் முகத்தை ஈரத்துணியால் மூடுங்கள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் வீட்டுக்குள் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் வெளியே வரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த விஷ வாயு கசிவால் இன்னும் பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

    English summary
    People found unconscious in lanes, ditches and near houses were taken to hospitals because of gas leaked in Visakhapatnam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X