For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் உசுருக்கு ஏதாவது ஆச்சுன்னா... மோடி தான் காரணம்.. குண்டை தூக்கி போடும் அன்னா ஹசாரே

Google Oneindia Tamil News

அகமது நகர்:காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தமக்கு ஏதாவது நேர்ந்தால் பிரதமர் மோடி தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்ற உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும் இன்னும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறைவேற்ற வில்லை. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின், லோக்பால் நீதிபதி யாரும் நியமிக்கப்படவில்லை.

People will blame prime minister modi if anything happens, says anna hazare

எனவே, மத்தியில் லோக்பாலும், மாநிலங்களில் லோக் ஆயுக்தாவும் நிறை வேற்றாததை கண்டித்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக சமீபத்தில் பிரதமர் மோடிக்கு அன்னாஹசாரே கடிதம் எழுதினார். அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க கோரியும் அவர் வலியுறுத்தி வந்தார்.

இந் நிலையில் அறிவித்தபடி காந்தியவாதி அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். அகமது நகர் மாவட்டத்தில் உள்ள தனது, கிராமமான ரலேகான் சித்தியில் காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

அன்னா ஹசாரேவின் உண்ணா விரத போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.இந் நிலையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அன்னா ஹசாரே கூறியதாவது:மக்கள் என்னை பிரச்னைகளை சந்தித்தவராகவே நினைவு கூறுவார்கள்.

மாறாக, பிரச்னையை பெரிதாக்குபவராக அல்ல. எனக்கு ஏதாவது நடந்தால், அதற்கு பிரதமர் மோடியே முழு பொறுப்பேற்க வேண்டும். மேலும், லோக்பால் சட்டத்தின் மூலம் மக்கள் எவரேனும் தக்க ஆதாரத்துடன் புகார் அளித்தால் பிரதமரையும் விசாரிக்க முடியும்.

அதேபோல் லோக் ஆயுக்தா சட்டத்தின் மூலம் சரியான ஆதாரங்கள் இருந்தால் முதல்வர்களையும், அமைச்சர்களையும் விசாரிக்க முடியும். அதனால் தான், எந்த அரசும் இச்சட்டங்களை அமல்படுத்த தயாராக இல்லை என்றார்.

English summary
Anti-corruption crusader Anna Hazare, who entered indefinite hunger strike said people will hold Prime Minister Modi responsible if anything happens to him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X