For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பால் பற்றி பேசி படாதபாடு பட்ட பீட்டா.. செருப்படி பதில் கொடுத்த நெட்டிசன்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: உங்களுக்கு பிடித்த இயற்கை பால் எது என்று கேட்ட பீட்டாவுக்கு இணையத்திலேயே செருப்படி பதிலடிகள் கிடைத்துள்ளன.

பசும்பால், ஆட்டுப்பால் போன்ற இயற்கை சார்ந்த பால் உணவுகளை தவிர்க்கச் செய்ய பீட்டா என்ற விலங்குகள் நல பன்னாட்டு அமைப்பு பிரசாரங்களை செய்துவருகிறது.

டிவிட்டரில் வலிந்து திணித்து இப்படி ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது பீட்டா. அதில் எந்த சைவ பாலை அருந்துவீர்கள் என கேட்டு , பாதாம் மில்க், சோயா மில்க், தேங்காய் பால், அரிசி மில்க் என நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டன.

இது போதாதா தமிழ் நெட்டிசன்களுக்கு. ரிப்ளேயில் செருப்படி பதில்களை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர். தலை சுற்றிவிட்டது பீட்டாவுக்கு.

கள்ளிப்பால்

பிரசாந்த் அளித்துள்ள பதிலில், "கள்ளிப்பால்.. நீங்களும் குடிச்சி பாருங்க. உங்க மெம்பர்கள் எல்லோருக்கும் ஒரு டம்ளம் தருகிறோம். ரொம்ப திடமானதாக இருக்கும்" என பதிலடி கொடுத்துள்ளார்.

நாட்டுமாடு

ஹிந்தியில் பெயர் ஹேண்டில் வைத்துள்ள ஒரு நெட்டிசன் தமிழர்களுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளதோடு, பீட்டாவை விரைவில் உதைத்து வெளியேற்றுவோம் என்றும் எச்சரித்துள்ளார். நாட்டு பசும்பால்தான் சிறந்தது என அவர் கூறியுள்ளார்.

ஆரோக்கியம்

தமிழகத்திலுள்ள நாட்டு பசு மாட்டிலிருந்து கிடைப்பது ஆரோக்கியமான ஏ2 வகை பால் என்று கூறியுள்ளதோடு, மற்ற பாலை பீட்டா உறுப்பினர்கள் வாயில் ஊற்றுமாறு கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

கூல்ட்ரிங்ஸ் போச்சு

பிற நாட்டு மாடுகளின் பாலை பிரபலப்படுத்த முயன்ற பீட்டாவுக்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, வெளிநாட்டு குளிர்பான விற்பனையை குறைத்துக்கொண்டதையும், குடிப்பதை நிறுத்திவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறது இந்த மீம் டிவிட்.

பரிதாப மாடுகள்

நீங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பசு மாடுகளில் இருந்து ஏ1 பாலை குடியுங்கள் என கூறும் இந்த டிவிட், செயற்கை கருவூட்டலால் பால் மடி பெருத்து பரிதாபமாக காணப்படும் வெளிநாட்டு மாட்டின் படத்தையும் போடப்பட்டுள்ளது.

English summary
Peta india gets slams from Tamil netizens while asking about drinking milk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X