For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷீனா, இந்திராணியின் தங்கை என்றல்லவா நினைத்திருந்தேன்...அதிர்ச்சியில் பீட்டர் முகர்ஜி

Google Oneindia Tamil News

மும்பை: இந்திராணியால் கொல்லப்பட்டது அவரது மகள் ஷீனா போரா என்று அறிந்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். அவளை நான் இந்திராணியின் சகோதரி என்றுதான் நினைத்திருந்தேன். அப்படித்தான் என்னிடம் சொல்லி வைத்திருந்தனர். எல்லாவற்ரையும் என்னிடமிருந்து மறைத்து விட்டனர் என்று ஸ்டார் இந்தியா முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜி கூறியுள்ளார்.

முன்னாள் ஸ்டார் இந்தியா நிறுவன தலைமை செயலதிகாரி பீட்டர் முகர்ஜியின் தற்போதைய மனைவி இந்திராணி முகர்ஜிக்கும், அவரது முதல் கணவருக்கும் பிறந்தவரான 22 வயது ஷீனா போராவை, இந்திராணி முகர்ஜி கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்து, உடலை எரித்து மும்பை அருகே காட்டுப் பகுதியில் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திராணி முகர்ஜி, அவரது முதல் கணவர் சஞ்சீவ் கன்னா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஷீனா கொல்லப்பட்டது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார் பீட்டர் முகர்ஜி.

இந்திராணியா கொன்றது

இந்திராணியா கொன்றது

இதுகுறித்து பீட்டர் முகர்ஜி கூறுகையில், ஷீனாவை இந்திராணி கொன்றிருப்பார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. மேலும் ஷீனா கொலை செய்யப்பட்டதற்கு எந்த அறிகுறியையும், இந்திராணி கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் வரை நான் அறியவில்லை. உணரவில்லை.

சகோதரி என்றல்லவா சொல்லியிருந்தார்கள்

சகோதரி என்றல்லவா சொல்லியிருந்தார்கள்

அதை விட என்ன கொடுமை என்றால் ஷீனா, எனது மனைவியின் முதல் கணவருக்குப் பிறந்த மகள் என்பதே எனக்குத் தெரியாமல் போய் விட்டது. அவளை, நான் இந்திராணியின் சகோதரி என்றுதான் நினைத்திருந்தேன். அப்படித்தான் என்னிடம் சொல்லி வைத்திருந்தனர்.

என்னை இருட்டில் வைத்து விட்டனர்

என்னை இருட்டில் வைத்து விட்டனர்

எல்லாவற்றையும் எனக்குத் தெரியாமல் மறைத்து விட்டனர். என்னை இருட்டில் வைத்து விட்டனர். தனது முந்தையத் திருமணம் மூலம் பிறந்த ஷீனா குறித்து எனக்குத் தெரிவிக்காமலேயே விட்டு விட்டார் இந்திராணி.

அதிர்ச்சி அடைந்தேன்

அதிர்ச்சி அடைந்தேன்

ஆனால் ஷீனா எனது மனைவியின் மகள் என்பதை போலீஸார் சொன்னபோது நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். எனக்கும், முன்னாள் மனைவிக்கும் பிறந்த மகனுடன், ஷீனா காதல் கொண்டிருந்ததை நானும் இந்திராணியைப் போலவே ஏற்றுக் கொள்ளவில்லை.

மாற்றம் வரும் என்று நினைத்திருந்தேன்

மாற்றம் வரும் என்று நினைத்திருந்தேன்

அவளை அமெரி்க்காவுக்கு அனுப்புவதாக இந்திராணி சொன்னபோது சரி மாற்றமாக இருக்கட்டும் என்று நானும் சரி என்று கூறியிருந்தேன் என்று கூறியுள்ளார் பீட்டர் முகர்ஜி.

English summary
Former Star India Chief Peter Mukerjea has said that he was shocked that the young woman she is accused of murdering was her daughter, not sister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X