For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு - காஷ்மீர் மத்திய ரிசர்வ் போலீஸ் முகாம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

ஸ்ரீநகரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் முகாம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் முகாம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 50 நாட்களில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி இந்திய நிலைகள் மீது 290 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

petrol bomb blast in srinagar

இதனிடையே போண்டிபோரா மாவட்டத்தில் இன்று நடந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் முகாம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். போலீஸ் முகாம் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

English summary
one injured after a petrol bomb blast on 144 Bn CRPF bunker at Habba-Kadal Srinagar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X