For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரத் பந்த்துக்கு மறுநாளே மீண்டும் உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை.. ரூ.90ஐ தாண்டிய கொடுமை

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டும் உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை | கலால் வரியை குறைக்க முடியாது..மத்திய அரசு- வீடியோ

    மும்பை: பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாரத் பந்த் நடத்திய மறுதினம் கூட அவற்றின் விலை, இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவின் பர்பானி என்ற பகுதியில் பெட்ரோல் விலை 90 ரூபாயை எட்டியது.

    இன்றைய நிலவரப்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80 ரூபாய் 87 காசுகளாக உள்ளது மும்பையில் 88.26 ரூபாயாக உள்ளது அதேபோல டீசல் விலை முறையே 72 புள்ளி 97 மற்றும் 77.44 ரூபாய்களாக உள்ளனர்.

    Petrol, diesel prices going upwards today as well

    சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.5 எனவும், டீசல் விலை லிட்டருக்கு 77.13 ரூபாயாகவும் உள்ளன.

    சென்னையைப் பொறுத்த அளவில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து உள்ளது. டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து உள்ளது.

    மகாராஷ்டிராவின் பர்பானி என்ற பகுதியில் பெட்ரோல் விலை 90 ரூபாயை எட்டியது. நாட்டிலேயே, வரலாற்றில் முதல் முறையாக, ஒரு லிட்டர் பெட்ரோலை 90 ரூபாயை தாண்டி விற்பனை செய்யும் பகுதி என்ற சா(சோ)தனையை இந்த பகுதி படைத்தது.

    English summary
    Petrol price crossed the Rs 90-mark in Maharashtra’s Parbhani on Tuesday, the costliest in any Indian city, a day after an Opposition-sponsored Bharat Bandh saw the government reiterate that it had no plans to cut excise duty on petroleum products.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X