For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு.. ராத்திரியோடு ராத்திரியாக அமல்

Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை திடீரென ராத்திரியோடு ராத்திரியாக உயர்த்தியுள்ளனர். பெட்ரோல் விலையை உயர்த்துவது இந்த ஆண்டில் இது 2வது உயர்வாகும். அதேசமயம், 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து டீசல் விலை உயர்த்தப்படுவது இது 14வது முறையாகும்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 60 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசா ஏற்றியுள்ளனர்.

Petrol price hiked by 60 paise/litre; diesel by 50 paise

நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது இந்த உயர்வுகள். இந்த உயர்வானது, உள்ளூர் வரிகள், வாட் போன்றவை சேர்க்காதது ஆகும். எனவே பெட்ரோல், டீசல் விலையானது மாநிலத்துக்கு மாநிலம், நகரத்துக்கு நகரம் மாறுபடும்.

கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி பெட்ரோல் விலையானது 91 பைசா உயர்த்தப்பட்டது. தற்போதைய உயர்வின் மூலம் டெல்லியில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 73.16 ஆக இருக்கும். மும்பையில் இது ரூ. 82.07 ஆக இருக்கும்.

சர்வதேச அளவில் டாலரின் மதிப்புக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தால் இந்த விலை உயர்வு என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Petrol price was today hiked by 60 paise a litre, the second increase this year, and diesel by 50 paise per litre, the 14th hike since January 2013. The hikes, effective from midnight tonight, are excluding local sales tax or VAT and actual increase will be higher and will vary from city to city. Petrol price, which was last hiked by 91 paise on January 4, will cost Rs. 73.16 a litre in Delhi from midnight tonight, up 73 paise from Rs. 72.43 at present.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X