For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அங்க அடிச்சா இங்கே வலிக்குதே.. ரமணா ஸ்டைலில் பெட்ரோல் விலை.. தவிக்கும் வாகன ஓட்டிகள்!

Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருப்பதால் இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

சவுதியில் தஹ்ரானில் அந்நாட்டின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் ஆரம்கோ என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதன் மற்ற எண்ணெய் வயல்களான கவார், சாய்பா ஆகியன உலகின் மிகப் பெரிய எண்ணெய் வயல்களாகும்.

பல மில்லியன் செலவழித்தும் மக்கள் வரலியே.. ஹவுடி மோடி பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கடுகடுப்புபல மில்லியன் செலவழித்தும் மக்கள் வரலியே.. ஹவுடி மோடி பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கடுகடுப்பு

இந்தியாவுக்கு விற்பனை

இந்தியாவுக்கு விற்பனை

இங்கு உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக சவுதி விளங்குகிறது. இந்த நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் மூலம் மாதம்தோறும் 2 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு விற்கப்படுகிறது.

அமெரிக்கா

அமெரிக்கா

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்கோ நிறுவனத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. ஆனால் அதை அந்நாடு மறுத்துள்ளது.

தாக்கம் அதிகம்

தாக்கம் அதிகம்

இந்த தாக்குதலால் கச்சா எண்ணெய் தீப்பிடித்து எரிந்தது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்தது. சவுதியில் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வரும் நிலையில் இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு

பெட்ரோல் விலை உயர்வு

இந்தியா முழுவதும் கடந்த 6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ரூ 2 வரை உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை இன்று டெல்லியில் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்துள்ளது. லிட்டர் பெட்ரோல் ரூ.73.91-க்கு விற்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

English summary
Petrol price goes to Rs. 73.91 in national capital as drone attack on Saudi Oil company impact.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X