For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீபாவளி அன்று வைரலானது பொற்கோவிலின் போட்டோஷாப் புகைப்படம்

தீபாவளி நாளில் பொற்கோவிலின் போட்டோஷாப் புகைப்படம் ட்விட்டரில் வைரல் ஆனது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

அமிர்தசரஸ்: தீபாவளி அன்று வைரலான அமிர்தசரஸ் பொற்கோவிலின் புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டது என்கிற உண்மை தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் இந்தியா முழுக்க தீபாவளி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலும் அந்த நாளில் தான் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டதால் அவர்களும் அந்த நாளைக் கொண்டாடி வருகிறார்கள்.

Photoshopped golden temple photo got viral on Diwali Day

இந்நிலையில், வானில் அலங்கார மெழுவர்த்திகள் பறக்க, மின் அலங்கார வெளிச்சத்தில் பொற்கோவில் பிரகாசமாக ஒளிரும் புகைப்படத்தை எழுத்தாளர் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஏராளமானோர் அந்தப் படத்தை பகிர்ந்தனர்.

தொடர்ந்து பலரால் பரப்பப்பட்ட நிலையில் அந்தப் புகைப்படம் வைரலானது. பலரும் அதை ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் என பல்வேறு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அது போலியானது என்று சிலர் சொன்னாலும் நம் மக்கள் அதை ஏற்கும் மனநிலையில் இல்லை. தொடர்ந்து பரப்பிக் கொண்டே இருந்தனர்.

தற்போது அது உண்மையான புகைப்படம் இல்லை என்றும், அது தன்னால் போட்டோஷாப் செய்யப்பட்ட புகைபடம் என்றும் அதை உருவாக்கிய வாலிபர் ஆதாரத்தோடு வெளியிட்டு இருக்கிறார்.

அதோடு தான் வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை என்றும், ஒரு கலையின் வடிவமாகவே இதை உருவாக்கினேன் என்று நவ்கிரண் பிரர் என்கிற அந்த வாலிபர் ட்விட்டரில் பதிந்து இருக்கிறார்.

English summary
Photoshopped golden temple photo got viral on social medias on diwali day. creator of the photo now reveals the truth on twitter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X