For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாற்றுத்திறனாளிகளை மாநில அரசுகள் கைவிடக்கூடாது - மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை மாநில அரசுகள் உயர்த்த மத்திய அமைச்சர் தாவர்சந்த் அறிவுறுத்தியுள்ளார்

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துமாறு மாநில அரசுகளை மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் அறிவுறுத்தியுள்ளார்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

Physically challenged must get equal opportunities says Central minister

2017ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் கொண்டுவந்த பிறகு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 6 விழுக்காடாக உயர்த்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதற்காக செயல்படும் வாரியங்களும், அமைப்புகளும் இதில் தனி கவனம் எடுத்து அவர்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகளை பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேபோல் மற்ற மாநிலங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கேட்டுக்கொண்டார்.

English summary
Physically challenged must get equal opportunities says Central minister Dhavarchadh gelat. And also he urged State governments to increase the reservation to them according to their Numbers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X