For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மயக்கும் செவ்வாய்.. மலைக்க வைக்கும் மங்கள்யான் போட்டோக்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: இங்கிருந்து பார்த்தால் மங்கலாக தெரியும் செவ்வாய் கிரகத்தை சுற்று உற்று நோக்கிப் பார்த்து பிரமிக்க வைத்துள்ளது இந்தியாவின் மங்கள்யான். மங்கள்யானில் உள்ள அதிநவீன கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இஸ்ரோவின் சாதனையை நினைத்து நம்மை பெருமை கொள்ள வைக்கின்றன.

இந்தியாவின் மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஆய்வு செய்து வருகிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்து வரும் மங்கள்யான், பல புதுப் புதுத் தகவல்களை ஆராய்ச்சியாளர்களுக்கு அளித்து வருகிறது.

அங்கிருந்தபடி பல புகைப்படங்களை அது அனுப்பி வைத்துள்ளது. அவற்றின் மூலம் செவ்வாய்கிரகத்தின் மேற்பரப்பு குறித்த மேலும் பல அரிய தகவல்கள் நமக்கு கிடைத்து வருகின்றன.

இதோ, அது அனுப்பிய புகைப்படங்களின் தொகுப்பு...

அரேபியன் டெர்ரா...

அரேபியன் டெர்ரா...

இது அரேபியன் டெர்ரா மற்றும் கில் ஆகிய இரு பகுதிகளைச் சுட்டி் காட்டும் படமாகும். மங்கள்யானின் எம்சிசி எனப்படும் மார்ஸ் கலர் கேமரா எடுத்த புகைப்படம் இது. அரேபியன் டெர்ரா என்பது வடக்கு செவ்வாயில் உள்ள பகுதியாகும். பார்ப்பதற்கு அரேபியாவின் உருவத்தை ஒத்திருப்பதால் இந்தப் பெயர்.

ஹென்ரி கிரேட்டர்...

ஹென்ரி கிரேட்டர்...

இது ஹென்ரி கிரேட்டர் பள்ளத்தாக்குப் பகுதியாகும். படத்தில் காணப்படும் குட்டி குட்டி பள்ளங்களும் கூட பள்ளத்தாக்கு பகுதிகள்தான்.

தராசிஸ் தோலஸ் எரிமலை...

தராசிஸ் தோலஸ் எரிமலை...

இது செவ்வாய் கிரகத்தில் உள்ள தராசிஸ் தோலஸ் என்ற எரிமமலையின் அச்சுறுத்தும் மேற்பரப்பு. பார்க்கவே பயங்கரமாக இருக்கிறதல்லவா.

பள்ளத்தாக்குகளும், சமவெளிகளும்...

பள்ளத்தாக்குகளும், சமவெளிகளும்...

இங்கே புள்ளி புளியாக காணப்படுவது சிறு சிறு மற்றும் பெரிய சைஸ் குன்றுகள், மலைகளாகும். இட்லி தட்டில் உள்ள பள்ளம் போலக் காணப்படுவது பள்ளத்தாக்குகளாகும்.

டாய்டாய் பள்ளத்தாக்கு...

டாய்டாய் பள்ளத்தாக்கு...

இங்கே காணப்படுவது டாய்டாய் பள்ளத்தாக்கு ஆகும். தூரத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் படத்திலேயே அது எவ்வளவு தத்ரூபமாக தெரிகிறது எனப் பாருங்கள்.

சமவெளி...

சமவெளி...

இது ஓபிர் சாஸ்மா சமவெளிப் பகுதியாகும். பார்க்கவே பிரமிக்க வைக்கும் வகையில் இந்தப் புகைப்படம் அமைந்துள்ளது.

3டியில்ஓபிர்...

3டியில்ஓபிர்...

இதில் முப்பிரமாணக் கோணத்தில் ஓபில் சாஸ்மா சமவெளியைப் பார்க்கலாம்.

கேல் கிரேட்டர்...

கேல் கிரேட்டர்...

இதுதான் பிரபலமான கேல் கிரேட்டர் ஆகும். மிகப் பெரிய பள்ளத்தாக்கு இது.

ஹூஜென்ஸ் கிரேட்டர்...

ஹூஜென்ஸ் கிரேட்டர்...

இது ஹூஜென்ஸ் பள்ளத்தாக்குப் பகுதியின் சற்று குளோசப் படமாகும். சூரிய வெளி பட்டு பி்ரகாசிக்கிறது பாருங்கள் இந்த பள்ளத்தாக்கு.

குளோசப்பில் ஹூஜென்ஸ்...

குளோசப்பில் ஹூஜென்ஸ்...

இது ஹூஜென்ஸ் கிரேட்டரின் குளோசப் படங்கள். மேலே உள்ள படம் அந்த பள்ளத்தாக்கின் பிரமாண்டத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

செவ்வாயில் மனிதர்கள்...

செவ்வாயில் மனிதர்கள்...

செவ்வாயில் மனிதர்களைக் குடியேற்றும் கனவினை நோக்கி சர்வதேச அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் அது சாத்தியமானால், இந்த இடங்களை நாமோ அல்லது நமது சந்ததியோ நேரில் காணும் பாக்கியத்தைப் பெறலாம்.

"அந்தப் பாறையை பாருங்க.. யாரோ எட்டிப் பார்க்கிறது போலவே இருக்கா.. செவ்வாயில் உயிர் இருக்கு பாஸ்"

English summary
Marking India's first venture into the interplanetary space, MOM will explore and observe Mars surface features, morphology, mineralogy and the Martian atmosphere. Further, a specific search for methane in the Martian atmosphere will provide information about the possibility or the past existence of life on the planet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X