For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடடே.. பாகிஸ்தானிலிருந்து உளவு பார்க்க யாரு வந்திருக்கா பாருங்க.. இப்போ வசமாக சிக்கியாச்சுல்ல

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: றெக்கையில் இளஞ்சிவப்பு வண்ணம்.. கழுத்துப்பகுதி கருப்பு.. வெண்மை உடல்.. இப்படி ஒரு புறா ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள வேலி பகுதியையொட்டி, இந்தப் புறா இன்று சிக்கியுள்ளது.

அப்பகுதி பொதுமக்கள், இந்த புறா ஏதோ ஒரு வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து சந்தேகப்பட்டுள்ளனர். எனவே, அதை லாவகமாக பிடித்து போலீசுக்கு தகவல் சொல்லியுள்ளனர்.

இப்படியே போனால் சிக்கல்தான்.. கொரோனாவுக்கு எதிராக.. 3 முக்கிய வியூகங்களை மாற்றியாகனும்! இப்படியே போனால் சிக்கல்தான்.. கொரோனாவுக்கு எதிராக.. 3 முக்கிய வியூகங்களை மாற்றியாகனும்!

புறா காலில்

புறா காலில்

இதையடுத்து சிறப்பு காவல்துறை கண்காணிப்பாளர், சைலேந்திர மிஸ்ரா தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது, புறாவின் கால் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு மோதிரம் வடிவிலான உலோகம் இருப்பது தெரியவந்தது.
பாகிஸ்தான் உளவு அமைப்புகள், இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக, இதுபோன்ற புறாவை அனுப்பி வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ட்ரோன் வேண்டாமாம்

ட்ரோன் வேண்டாமாம்

ட்ரோன் போன்ற உளவு கருவிகள் மூலமாக உளவு பார்க்க அனுப்பி வைக்கும் போது அதை இந்திய ராணுவம் முறியடித்து விடுகிறது. எனவே புறாவில் உளவு கருவிகளை இணைத்து, இந்திய எல்லைக்குள் அனுப்பி உளவு பார்க்கும் வேலையில் பாகிஸ்தான் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணை

விசாரணை

இந்தப் புறா எங்கே இருந்து கிளம்பியது என்பது பற்றிய சரியான விவரம் இன்னும் கிடைக்கவில்லை என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சைலேந்திர மிஸ்ரா தெரிவித்தார். மன்னர் காலத்தில் இருந்தே, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் பதற்றத்திற்கு புறா முக்கிய பங்காற்றி வந்துள்ளது.

மன்னர் காலம்

மன்னர் காலம்

புறாவின் கால்களில் கடிதத்தை கட்டி எதிரி நாடுகளுக்கு போர்முரசு அறிக்கை அனுப்புவது சில நாடுகளின் வாடிக்கை. சமாதானத் தூதும் புறா மூலமாக நடந்துள்ளது. இப்போது எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், இன்னமும் பாகிஸ்தான் புறாக்களில் உளவு கருவிகளை கட்டி, உளவு பார்க்க அனுப்பிக்கொண்டு இருக்கிறது என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் தான்.

English summary
Jammu & Kashmir Locals in Kathua captured a pigeon near Indian border fences today, says Shailendra Mishra, SSP Kathua.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X