For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10 சீக்கியர்கள் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கு.. 25 வருடங்களுக்கு பின் 47 போலீசாருக்கு ஆயுள் தண்டனை

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: 10 சீக்கியர்களை போலியாக என்கவுண்டர் செய்த வழக்கில், 47 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1991ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி உத்தரபிரதேசத்தில் உள்ள பிலிபிட்டில் உள்ள கோவிலுக்கு தரிசனம் செய்ய சீக்கிய பக்தர்கள் நிறைந்த பேருந்து சென்றது. அப்போது பஸ்சை போலீசார் நிறுத்தி பக்தர்கள் 10 பேரை கட்டாயப்படுத்தி பேருந்தில் இருந்து இறக்கினர்.

Pilibhit fake encounter case: 47 policemen jailed for life for killing 10 Sikhs

பின்னர் அவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து அவர்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

25 ஆண்டுகளாக நடந்த வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 57 பேரில் ஏற்கனவே 10 பேர் இறந்து விட்டதால் 47 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Justice in the 1991 Pilibhit fake encounter case in which 10 Sikhs were gunned down by a team of Uttar Pradesh police has been finally delivered. All 47 policemen convicted in the case have been sentenced to life imprisonment by a Special CBI court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X