For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்.. கர்நாடக பட்ஜெட் உரையில் முதல்வர் அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட குமாரசாமி- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் ரூ.2 லட்சம் வரை விவசாயிகள் பெற்ற விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று முதல்வர் எச்.டி.குமாரசாமி தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதசார்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு கர்நாடகாவில் அமைந்துள்ளது. முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவி வகித்து வருகிறார். கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டசபையில் குமாரசாமியால் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, விவசாய கடன் தள்ளுபடி உத்தரவை குமாரசாமி பிறப்பித்தார்.

    Plans for a #reservoir to be built in Mekedatu: Karnataka CM

    இதுகுறித்து அவர் கூறுகையில், ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்களை பெற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.34,000 கோடி செலவாகும்.

    இஸ்ரேல் பாணியில் வறண்ட நிலத்தில் பாசனம், விளைச்சலை ஊக்கப்படுத்த, வறண்ட பகுதிகளான கோலார், சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.150 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

    பெங்களூருக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், மேகதாது பகுதியில் காவிரிக்கு குறுக்கே அணை கட்டப்படும். மத்திய அரசு அனுமதியளித்ததும், அணை கட்டும் பணிகள் துவங்கப்படும்.

    அதேநேரம், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.14, டீசலுக்கு ரூ.1.12 விலை உயரும் வகையில், செஸ் வரி உயர்த்தப்படும். மதுபானங்கள் மீது 4 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மொத்தம், 2,18,488 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்ஜெட்டை குமாரசாமி தாக்கல் செய்துள்ளார்.

    English summary
    Decided to waive all defaulted crop loans of farmers up to 31 December, 2017 in the first stage: Karnataka Chief Minister HD Kumaraswamy in Vidhana Soudha, Bengaluru.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X