For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிறந்து சில வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையின் உயிர் காக்க உதவுங்கள்!

பல பேர்களின் உயிரை காப்பாற்ற உதவி புரிந்த ஆம்புலன்ஸ் டிரைவரின் பிஞ்சு பேரக் குழந்தையை காப்பாற்ற முடிந்தால் உதவுங்கள்

By Staff
Google Oneindia Tamil News

டிசம்பர் 4, 2017 ல் அடுத்தடுத்து ஓயாமல் இரண்டு நோயாளிகளை கொண்டு மருத்துவமனையில் சேர்த்தேன். தீடீரென்று அப்பொழுது 3 வது தடவையாக ஒரு அழைப்பு வந்தது. இதுவரை நான் எதிர்பார்க்காத ஒரு அழைப்பு. கருவுற்று இருக்கும் என் மகள் ரெம்ப சீரியஸ் நிலையில் இருக்கிறார். அவளுக்கு எந்த உணர்வும் இல்லையாம் உடனே சிசேரியன் பண்ணி குழந்தையை வெளியே எடுக்க வேண்டும். அப்படி எடுத்தாலும் குழந்தை பிழைக்குமா? என்று சொல்ல முடியாது ஏனெனில் குழந்தை மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது என்று டாக்டர் சொல்லியதும் என் நெஞ்சு பட படக்க ஆரம்பித்து விட்டது. கை கால்கள் நடங்க ஆரம்பித்து விட்டது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இது அவள் முதல் பிரசவம் வேறு.

 Donation

எனது தினசரி வேலையே உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றுவது தான். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயிர்களை மீட்டுக் கொடுத்து இருக்கிறேன். சரியான நேரத்தில் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தினமும் கடவுளை வேண்டியிருக்கேன். உயிர் பிழைத்த எல்லாரும் தவறாமல் தங்களின் நல்லாசையையும் நன்றியையும் தெரிவித்து உள்ளனர். அவர்களின் அந்த வார்த்தை தான் இன்று என் பிஞ்சு பேரக் குழந்தையின் உயிரை காப்பாற்ற போகிறது என்று நான் நம்புகிறேன். அந்த பச்சிளம் குழந்தை தற்போது சுவாசிக்கவே முடியாத நிலையில் Rainbow Children's Hospital இல் சேர்க்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் அவனை சேர்த்துள்ளார்கள். அவனின் சீரான சுவாசத்திற்காக மருத்துவர்கள் பெரிதும் போராடி வருகின்றனர். இருப்பினும் எங்களால் முடிந்த உதவியை செய்கிறோம் என்று சொல்லி விட்டனர். அவன் உயிரை காப்பாற்ற என் கைமீறிய அளவாக 8.8 லட்சம் வரை தேவைப்படுகிறது.

 Donation

நீங்கள் உங்கள் நன்கொடைகள் மூலம் உயிருக்கு போராடும் ரஹ்மானின் பேரக் குழந்தையின் வாழ்வை மீட்டுக் கொடுக்க உதவலாம்.

"என் பெயர் ரஹ்மான். நான் தான் இந்த குழந்தையின் தாத்தா. நான் ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றிகிறேன். என் மாத வருமானமே 6000 ரூபாய் தான். இதை வைச்சு தான் 3 பேர் அடங்கிய என் குடும்பத்தை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறேன். எங்களது பராம்பரிய முறைப்படி எங்கள் மகளின் முதல் பிரசவத்தை நாங்கள் தான் பார்த்தாக வேண்டும். நான் என் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி மூலம் ஒரு 2.5 லட்சம் ரூபாயை திரட்டியுள்ளேன். எனது மருமகன் குடும்பத்தாரும் ஏழ்மையான சூழலில் இருப்பவர்கள். அவர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஓரு நாள் வாடகை மட்டுமே ரூபாய் 10,000 வரை செலவாகிறது. இது என் மாத வருமானம் அளவை விட அதிகம் என்பது தான் என்னுடைய நிலை. இதை தவனை முறையில் இ. எம். ஐ மூலம் கட்டிக் கொண்டு வருகின்றேன்.

 Donation

இந்த பணத்தை எப்படியாவது திரட்ட வேண்டும் என்று நான் நாள் முழுவதும் 12 மணி நேரம் கூடுதலாக வேலை பார்க்கிறேன். இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக ஆம்புலன்ஸ் ஓட்டுகிறேன். மருத்துவ மனையில் பணம் கட்டிடுங்கள் என்று சொல்லும் போதெல்லாம் என்னிடம் மெளனம் மட்டுமே நிற்கிறது. என்னால் அவ்வளவு பணம் கட்ட முடியாத நிலை என்று நான் யாரிடம் சொல்வது. ஒவ்வொரு நாள் தூங்கும் போதும் எப்படியாவது பணத்தை திரட்டிட வேண்டும் என்று தான் மூளையில் ஓடிக் கொண்டே இருக்கிறது. உயிருக்கு போராடும் என் பிஞ்சு பேரக் குழந்தையை நினைக்கும் போது அந்த நேரங்களில் என் கண்கள் கலங்கி விடுகின்றன."

உயிருக்கு போராடும் தன் பிஞ்சு பேரக் குழந்தையின் உயிரை காப்பாற்ற ரஹ்மான் கஷ்டப்படுகிறார். அவருடைய நிதியை திரட்ட நீங்களும் உதவிக் கரம் நீட்டலாம்.

 Donation

"என்னுடைய கவலைகளையும் மன வருத்தத்தையும் என்னுடன் பணி புரிபவர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன். என் மகளிடம் கூட கூற முடியவில்லை. அவள் இப்பொழுது ஒரு தாய். தன் குழந்தையின் நலனே மட்டுமே உயிராக நினைப்பவள். என் மனைவியிடமும் இதை பற்றி கூறி அவளின் கண்ணீரை பார்க்க எனக்கு விருப்பமில்லை. எப்பொழுதும் போலவே புன்னகைக்கிறேன். என் மகளை காணும் போதெல்லாம் நான் இருக்கிறேன் நீ கவலைப்படாதே என்று சொல்லியே அவளை தேத்துகிறேன்.

தினமும் எனது வேலையை முடித்த பிறகு எனது மகளையும் என் பேரக் குழந்தையையும் போய் பார்ப்பேன். இப்பொழுது அவன் எடை வெறும் 1 கிலோ தான் இருக்கிறது. உடம்பும் பலவீனமாக இருக்கிறது. அவன் தீவிர சிகிச்சை பிரிவில் குறைந்தது 4-5 வாரங்களாவது இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவனது வாழ்க்கையை காப்பாற்ற முடியும். நான் கடவுள் அல்லாவிடம் வேண்டாத நாளில்லை எப்படியாவது அந்த பிஞ்சு குழந்தையை காப்பாற்றி விடு அவனது வாழ்க்கையை திரும்ப கொடுத்து விடு என்று. தயவு செய்து எனக்கு உதவுங்கள். உங்கள் ஒவ்வொருவரின் சிறு உதவியும் என் பேரக் குழந்தையின் உயிரை எனக்கு மீட்டுத் தரும். என் மனதில் உள்ள வலியை போக்க எனக்கு கை கொடுங்கள் . தயான என் மகளின் சந்தோஷத்தை திருப்பித் தர உதவுங்கள். உங்கள் உதவி என் குடும்பத்தாரையும் மகிழ்விக்கும். ஒரு அழகான உயிரை காக்க உதவிக் கரம் நீட்டுங்கள்.

 Donation

எங்கள் முகத்தில் மகிழ்ச்சியை மீட்டுத் தரப் போகும் உங்கள் உதவியை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம்."

நீங்கள் ரஹ்மானுக்கு உதவி செய்ய நினைத்தால் ketto மூலம் இங்கே உதவி செய்யலாம்.

English summary
After Saving Many Lives, This Ambulance Driver Struggles To Save His Own Grandson
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X