For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத் பிளஸ் 2 ரிசல்ட்..79 பள்ளிகளில் 10 சதவீதக்கும் குறைவான தேர்ச்சி.. அதிர்ச்சி நிலவரம்

Google Oneindia Tamil News

அஹமதாபாத்: குஜராத்தில் 79 பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வில் 10 சதவீதத்துக்கும் குறைவான அளவு மாணவர்களே தேர்ச்சி பெற்று உள்ளது அதிர்ச்சிiயை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் 12 வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 7ம் தேதி முதல் மார்ச் 27ம் தேதி வரை நடந்தது. இன்று தேர்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளது. மொத்தம் 3 லட்சத்து 55 ஆயிரத்து 560 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 500 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 plus 2 exam result in gujarat: 79 schools students perform below 10 percent result

ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு 73.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4.3 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் 79 பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வில் 10 சதவீதத்துக்கும் குறைவான அளவு மாணவர்களே தேர்ச்சி பெற்று உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தில் மொத்தம் உள்ள 206 79 பள்ளிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான மாணவரக்ளே 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர். குஜராத் மாநில மீடியத்தில் படிப்பவர்களை விட ஆங்கில வழியில் படிப்பவர்களின் தேர்ச்சி விகிதம் 83.96 ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சியில் மாணவிகளை விட மாணவர்களே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 79.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் ஆனால் மாணவிகள் 67.94 சதவீதம் அளவுக்கே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

English summary
79 schools students perform below 10 percent result in plus 2 exam result in gujarat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X