For Daily Alerts
Just In
ஹெர்குலஸ் விமான விபத்து: பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல்
டெல்லி: நாட்டின் விமான படைக்குச் சொந்தமான ஹெர்குலஸ் சி-130 விமானம் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் பலியானதற்கு பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்
ஐஏஎப் சி-130 வகை விமானம் மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் அருகே நேற்று விபத்துக்குள்ளானது. ஆக்ராவில் இருந்து புறப்பட்டுச் சென்ற இந்த விமானம் 72 மைல் தொலைவில் குவாலியரில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணம் செய்த 5 பேரும் பலியாயினர். இந்த விபத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், இந்த விபத்து மிகவும் துர்ஷடவசமானது. விமான விபத்தில் வீர மரணம் அடைந்த வீரர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. விமான விபத்தில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.