For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழை பெய்தால் காணாமல் போய்விடும் சாலைகளை அமைக்கும் கான்ட்ராக்டர்கள்: மோடி குற்றச்சாட்டு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சண்டீகர்: ஹரியானா மாநிலம் கைதால் முதல் ராஜஸ்தான் மாநில எல்லை வரையிலான புதிய தேசிய நெடுஞ்சாலை போடும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

PM lays foundation stone of Haryana-Rajasthan highway

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மத்தியில் மோடி பேசியதாவது:

  • கிருஷ்ண ஜென்மாஷ்டமி நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் தர்ம பூமியான குருஷேத்திரம் அமைந்துள்ள ஹரியானாவுக்கு நான் இன்று வந்துள்ளேன். பிரதமரான பிறகு ஹரியானாவுக்கு நான் வருவது இதுதான் முதல் முறை.
  • ஹரியானா மாநிலத்தார் மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ கற்றவர்கள்.
  • உலகம் வளர்ந்து சென்று கொண்டுள்ள இந்த சூழ்நிலையில் நாம் சும்மா இருக்க முடியாது. சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்போதுதான் ஒரு நாட்டால் வளர முடியும்.
  • ஹரியானாவையும்-ராஜஸ்தானையும் சாலை வசதியால் இணைப்பது வர்த்தக பயன்பாட்டுக்கு மிகவும் வசதியானதாக அமையும். வளர்ச்சி மட்டுமே நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் வல்லமை மிக்கது.
  • நமது நாட்டில் கான்ட்ராக்டர்கள் போடும் ரோடு, பலத்த மழை பெய்தால் காணாமல் போய்விடும். இது என்னுடையது இல்லை, எனக்கென்ன வந்தது என்ற மக்களில் பலரின் மனநிலைதான் இந்த நாட்டை அழித்துவிட்டது.
  • புற்றுநோயைவிட மோசமானது ஊழல். இந்த நாட்டில் இருந்து ஊழல் வேரடி மண்ணோடு அகற்றப்பட வேண்டும். அநீதியை இந்த நாடு இதற்கு மேலும் பொறுத்துக்கொண்டிருக்காது என்று நம்புகிறேன். இவ்வாறு மோடி பேசினார். 1400 கோடி மதிப்புள்ள இந்த சாலை திட்டம் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
English summary
Prime Minister Narendra Modi Tuesday laid the foundation stone of a crucial inter-state national highway (NH) in this Haryana town. Modi laid the foundation stone of the four-laned Kaithal-Narwana-Hisar-Siwani (Rajasthan) national highway (NH-65).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X