For Daily Alerts
Just In
கிரிமினல் எம்.பி.க்களை காக்கும் அவசர சட்ட விவகாரம்- ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு!

தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களை பாதுகாக்க மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியது. இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கோரி ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதியிடம் நேரில் மனு கொடுத்தது. மேலும் மத்திய அமைச்சர்களிடமும் ஜனாதிபதி விளக்கம் கோரியிருந்தார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் கடும் எதிர்ப்பு எழுந்தது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இந்த அவசர சட்டம் முட்டாள்தனமானது என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசினார். இருவரும் அவசர சட்டம் தொடர்பாக விவாதித்தனர்