For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்டம்.. கலவரக்காரர்களை உடையை வைத்தே கண்டுபிடிக்கலாம்.. பிரதமர் மோடி பகீர் பேச்சு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Citizenship Amendment Bill | Jamia Millia Islamia University protest | BJP Tweet

    தும்கா: குடியுரிமை சட்டத்தால் நாடே கொந்தளிப்பதன் பின்னணியில் இருப்பது காங்கிரஸும் அவர்களது கூட்டணி கட்சியினருமே காரணம், இதில் கலவரம் செய்பவர்களை உடையை வைத்தே யார் என்று கண்டுபிடிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4-ஆவது கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. மொத்தம் 15 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் தும்காவில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அவர் கூறுகையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் வன்முறைக்கு காங்கிரஸும், அதன் கூட்டணி கட்சியும் சப்தமில்லாமல் ஆதரவு தருகின்றன. இந்த காட்சிகள் எல்லாம் நாட்டின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்காகத்தான்.

    நீங்க... எத்தனை பிறவி எடுத்தாலும் சாவர்க்கர் ஆக முடியாது... ராகுல் மீது ஆர்.எஸ்.எஸ். அட்டாக் நீங்க... எத்தனை பிறவி எடுத்தாலும் சாவர்க்கர் ஆக முடியாது... ராகுல் மீது ஆர்.எஸ்.எஸ். அட்டாக்

    மோடி

    மோடி

    அதாவது குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் மோடி, நாடாளுமன்றம், அரசு ஆகியன நாட்டை பாதுகாத்துவிட்டது. பாகிஸ்தான். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்தவர்கள், அகதிகளாக வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு மரியாதை தருவதற்காகவே இந்த மசோதா சட்டமாக நிறைவேறியது.

    வன்முறை என்ன

    வன்முறை என்ன

    காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து அமளியில் ஈடுபடுகின்றன. கலவரம் நடப்பதை அவர்கள் ஊக்குவிக்கின்றனர். அவர்களுக்கு வேறு வழி தெரியாமல் பிரச்சினையை பெரிதாக்குகின்றனர். வன்முறையை உருவாக்குபவர்கள் அடையாளம் காணப்படுவர். இவர்களின் உடையை வைத்தே யார் என்று கண்டுபிடிக்கலாம்.

    எந்த திட்டமும் இல்லாத காங்கிரஸ்

    எந்த திட்டமும் இல்லாத காங்கிரஸ்

    நாட்டை முன்னேற்ற காங்கிரஸிடம் எந்த திட்டமும் இல்லை. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களை வன்முறை செய்ய காங்கிரஸ் தூண்டிவிடுகிறது. ஆனால் வன்முறையை செய்ய வடகிழக்கு மாநிலங்கள் தயாராக இல்லை.

    வளர்ச்சி திட்டங்கள்

    வளர்ச்சி திட்டங்கள்

    நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் சரி என்பது காங்கிரஸின் செயல்பாடுகளை வைத்தே தெரிகிறது. நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கவலைப்படாமல் எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு மட்டும் அரண்மனைகளை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் இங்கு வந்ததற்கு காரணம் மாநிலத்தில் பாஜக கட்சி மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்களை எடுத்து கூறுவதற்காக என்றார் மோடி.

    English summary
    PM Narendra Modi says in Jharkhand's Dumka election campaign that Congress & their allies are giving silent support to what is happening (incidents of violence over #CitizenshipAmendmentAct).
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X