For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழை மக்கள் பயன்பெறும் புதிய மின் திட்டம்... பிரதமர் மோடி அறிவிப்பு

மின்சாரம், சமையல் எரிவாயு, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை அடங்கிய சௌபாக்யா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் மின்சாரம், சமையல் எரிவாயு, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை அடங்கிய சௌபாக்யா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6.30 மணிக்கு முக்கிய திட்டம் ஒன்றை அறிவிக்கப் போவதாக நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்திருந்தார். மேலும் அவை ஏழைகளுக்கான திட்டம் என்றும் தெரிவித்திருந்தார்.

PM Modi to announce of important scheme for poor today

தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழாவையொட்டி பிரதமர் மோடி சௌபாக்யா யோஜனா என்ற புதிய மின் திட்டத்தை தொடங்கி வைத்தார். திட்டத்தின் சிறப்பம்சங்கள் இதோ:

  • மின் விநியோகம் தொடர்பான இந்த திட்டத்தின் மூலம் வரும் 2018-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைப்பதுதான் இலக்காகும்.
  • இந்த திட்டத்தின் மூலம் ரூ.500 செலுத்தி மின் இணைப்பை பெற்று கொள்ளலாம்.
  • ரூ.500-ஐ 10 மாத தவணையில் செலுத்தும் வசதியும் உண்டு.
  • இதற்காக ரூ.16,320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த திட்டங்களுக்கான செலவினத்தில் மத்திய அரசு சார்பில் 60 சதவீதமும், மாநில அரசு சார்பில் 10 சதவீதமும், மீதமுள்ள 30 சதவீதம் கடனாகவும் வழங்கப்படும்.
  • அனைத்து வீடுகளுக்கு மின்சாரம், மண்ணெண்ணெய்க்கு மாற்றாக சமையல் எரிவாயு, கல்வி மற்றும் மருத்துவ சேவைகள், தொலைத்தொடர்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும்.
  • எரிவாயு, மின்சார வசதி, மருத்துவ வசதிகள் ஆகியன தனித்தனி திட்டமாக இருந்து வந்த நிலையில் அவற்றை சௌபாக்யா திட்டம் மூலம் ஒரே திட்டமாக இணைப்பு.
  • வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு, வாழ்க்கைத் தரம் மேம்படுதல் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும்.
English summary
Union Finance Minister Arun Jaitley said that the Prime Minister Modi will make an announcement of a important scheme for the poor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X