For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு 14 மில்லியன் டாலர் நிதி உதவி.. அள்ளி வழங்கிய மோடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    PM Modi attends India-Caribbean Community leaders’ meeting in New York

    சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நேற்று நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் கூட்டத்திற்கு நடுவே, கரீபியன் சமூகம் மற்றும் பொதுச் சந்தை (CARICOM) உறுப்பு நாடுகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    இந்த சந்திப்பின் போது, ​​கரீபியன் சமூகம் மற்றும் பொதுச் சந்தை சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியையும், சோலார், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களுக்கான 150 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்களையும் வழங்குவதாக மோடி அறிவித்தார்.

    PM Modi announces $14 million grant for Caribbean

    கயானாவின் ஜார்ஜ்டவுனில் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பிராந்திய மையம் மற்றும் பெலிஸில் உள்ள பிராந்திய தொழில் பயிற்சி மையம் ஆகியவற்றை அமைப்பதையும் பிரதமர் மோடி அறிவித்தார்.

    கேரிகாம் என்பது கரீபியனில் அதாவது மேற்கிந்திய தீவுகளில் வளர்ந்து வரும் 20 நாடுகளின் கூட்டமைப்பாகும். அவை பொருளாதார மற்றும் அரசியல் சமூகத்தை உருவாக்குவதற்காகவும், பிராந்தியத்திற்கான கொள்கைகளை வடிவமைப்பதற்கும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

    கூட்டத்தில் கலந்து கொண்ட, மேற்கிந்திய தீவுகளின், தலைவர்களுக்கு அளித்த வரவேற்பு உரையில், பிரதமர் மோடி, பேசுகையில், "இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான உங்கள் ஆர்வத்தை நான் வரவேற்கிறேன். காலநிலை மாற்றம் மற்றும் வறுமை போன்ற இன்றைய சில முக்கிய பிரச்சினைகளுக்கு எதிராக இந்தியா போராடுகிறது.

    இன்றைய சந்திப்பு, பரஸ்பர ஒத்துழைப்புடன் நமது இன்றைய தேவைகள் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் கேரிகாம் நாடுகளுடன் இந்தியா இணைகிறது. நாம் ஒவ்வொருவரும் இன்று நமது தரப்பிலிருந்து முக்கியமான பரிந்துரைகளை முன்வைப்போம் என்று நம்புகிறேன்" என்று பிரதமர் மோடி கூறினார்.

    சிக்கல்.. ஜோ பிடன் பற்றி உக்ரைன் அதிபரிடம் விசாரிக்க கோரிய ட்ரம்ப்! ஆதாரத்தை வெளியிட்ட வெள்ளை மாளிகைசிக்கல்.. ஜோ பிடன் பற்றி உக்ரைன் அதிபரிடம் விசாரிக்க கோரிய ட்ரம்ப்! ஆதாரத்தை வெளியிட்ட வெள்ளை மாளிகை

    கரீபியன் தீவுகள் அமெரிக்க பிராந்தியத்தில் அமைந்துள்ளன. இதில் சில தீவுகள் கரீபியன் கடலால் சூழப்பட்டவை. சில தீவுகள் ஒருபக்கம் கரீபியன் கடலாலும், இன்னொரு பக்கம் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலாலும் சூழப்பட்டவை. இந்த தீவுகள், மெக்ஸிகோவின் தென்கிழக்கு வளைகுடா பகுதிகளிலும், மத்திய அமெரிக்காவிலிருந்து கிழக்குப் பகுதியிலும், தெற்கு அமெரிக்காவிலிருந்து வடக்கு பகுதியிலும் அமைந்துள்ளது.

    இதில் சுமார் 700 தீவுகள் உள்ளடங்கியுள்ளன. அமெரிக்காவுக்கு மிக அருகாமையில் உள்ள தீவுப்பகுதி இது என்ற போதிலும் கூட, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய நிலையில்தான் இவை உள்ளன. இந்த தீவுகளில் கணிசமாக இந்திய வம்சாவளியினர் வாழ்கின்றனர். இந்த நிலையில்தான், இந்தியா இந்த நிதி உதவியை, கரீபியன் நாடுகளுக்கு வழங்கி உள்ளது

    English summary
    Prime Minister Narendra Modi on Wednesday (local time) chaired a meeting with the member states of the Caribbean Community and Common Market (CARICOM) on the margins of the United Nations General Assembly in New York.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X